Published:Updated:

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''

அனல் அமீர்இரா.சரவணன்

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''

அனல் அமீர்இரா.சரவணன்

Published:Updated:
##~##

'எது வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். ''அமளிதுமளிபிரசாரம், அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர்.

 ''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யாரா?  அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமே அல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்?

இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் நாகரிகம்தான் பலிகடாவாகிவிட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல், 'குடிக்கிறார், அடிக்கி றார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள். நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற் றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!''

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''

''வடிவேலுவின் பிரசாரத்தைச் சொல்கிறீர்களா?''

''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம் மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்?

காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தக ராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம்.  

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன். வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன. அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!''

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''

''அப்படி என்றால், மது குடிப்பது தவறு இல்லை என்கிறீர்களா?''

''ஒரு தாய் என்ன கொடுத்தாலும் குழந்தை அதைச் சாப்பிடுகிறது. காரணம், தாய்  விஷத்தைக் கொடுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கை. மது குடிப்பது தவறு. ஆனால், அரசாங்கமே ஊற்றிக் கொடுக்கும் நிலையில், குடிப்பவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? உலகக் கோப்பை வாங்கிய மகிழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்க ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து, சச்சினும் டோனியும் குடிக்கிறார் களே... அது மது இல்லையா?''

''வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சதா பரபரப்பு கிளம்பியதே?''

''அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், நிச்சயமா அது தப்புதான். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரைத் தட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பின்னணி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளைக் காட்டியது, அடிச்சதை விட மோசமான விஷயம். குடிச்சதையும் அடிச்சதை யும் சொல்லிச் சொல்லியே, மக்களோட பிரச்னை களை மறக்கடிச்சிட்டாங்களே... அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்!''

''வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாசாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் சிங்கமுத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. 'விஜயகாந்த்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன்?’னு கேட்கிற வடிவேலுக்கு 'வைகைப் புயல்’ என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்தப் புயல் எந்த மரத்தை பேத்துச்சு... எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்டச் செயலாளர் தொடங்கி ரௌடிங்க வரைக்கும் அத்தனைப் பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தைப் பத்தி இவ்வளவு பேசுற வடிவேலு, அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும்? ஆட்சி மாறி னால் அதோ கதி ஆகிடும்கிற பயம்தானே? 'எப் போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன்!’ என 87 வயதிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத் திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?  

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல்... ஹீரோ பின் னால் ஒளிந்துகொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத் தான் பண்ணி இருக்கார். கலைஞர், ஸ்டாலின், அழகிரிங்கிற ஹீரோக்கள் பின்னால் ஒளிஞ்சு நின்னு பேசினார்!''

''இப்போ இவ்வளவு வெளிப்படையா பேசுற நீங்க, தேர்தலுக்கு முன்னரே பேசி இருக்கலாமே... தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன் தயாரிப்பில் படம் பண்றதால் தயங்கிட்டீங்களா?''

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''

''தயாரிப்பாளர் அன்பழகன் என்னிடம் இதுவரைக்கும் அரசியல் பேசியதே இல்லை. ஓர் இயக்குநரா என்னை அவர் மதிக்கிறார். அதைவிட அதிகமா நான் அவரை மதிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவுதான் எங்களுடையது. தேர்தலுக்கு முன்னர் இதை நான் பேசி இருந்தால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பாடுவதா முத்திரை குத்தி இருப்பாங்க. மூச்சுக் காத்துக்குகூட முத்திரை குத்துற ஊர் இது. மே 14-ம் தேதி முதல்வர் பதவியில் யார் உட்கார்ந்தாலும், அவங்களுக்கு என்னோட அன்பான கோரிக்கை... நீங்க முதல்வரான உடனேயே திரைத் துறையில் இருந்து ஒரு கூட்டம் ஓடி வரும். மாலை மரியாதை செய்து, 'பாராட்டு விழா நடத்துறோம்... தேதி கொடுங்க’ன்னு கேட்கும். அய்யாவா இருந்தாலும், அம்மாவா இருந்தாலும், ஒருபோதும் அதுக்கு மயங்கிடாதீங்க. அந்தக் கூட்டத்தை விரட்டி அடிங்க. சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க. அதில் அரசியலைக் கலக்காதீங்க.

நடிகர்கள் அரசியல் ஆசையோட அலையுறாங்கன்னா, அதுக்குக் கட்சிகள்தான் காரணம். பிரசாரத்துக்கு கூப்பிடுறாங்க... வாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாங்க... உடனே கூடுற கூட்டமும் கிடைக்கிற வெற்றியும் தன்னால் நடந்ததா நடிகர்கள் கனவோட திரியுறாங்க. நாளைக்கே வடிவேலு தனிக் கட்சி ஆரம்பிச்சாலும், ஆச்சர்யம்  இல்லை. யாரோ ஒருத்தர் எழுதிய வசனங்களைப் பேசிப் பழகிய வாய்கள் நாளைக்கு யாரை நோக்கியும் திரும்பும்!''

''அப்படின்னா திரைத் துறையினர் அரசியலுக்கு வரவே கூடாதா?''

''அப்படிச் சொல்லலை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை சினிமாவில் மூழ்கிக்கிடந்திட்டு, திடீர்னு அரசியல் அவதாரம் எடுப்பதைத்தான் கண்டிக்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. 2016 தேர்தல் களத்தில் நிச்சயம் இந்த அமீர் இருப்பான். இதை வைத்து, ஆட்சியைப் பிடிக்கிற ஆசைக்காரர்களில் என்னையும் ஒருத்தனா நினைச்சுடாதீங்க. மாணவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமா அனைவரையும் வாக்களிக்கவைக்கிறதுதான் நான் செய்யப் போற அரசியல். 'மாணவ மறுமலர்ச்சித் திட்டம்’னு ஆரம் பித்து, ஏழை மாணவர்களின் படிப்புக்கு மாணவர்களே உதவும் திட்டத்தை கும்பகோணம் கல்லூரியில் தொடங்கிவைத்து, பல கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இன்றைக்கு ஒற்றை மனிதரா ஊழலுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அண்ணா ஹஜாரே ஏற்படுத்தி இருக்கார். தள்ளாத வயதில் அவர் செய்ததை துள்ளும் வயதில் உள்ள நம்மால் செய்ய முடியாதா என்ன?!''

''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''