Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  'உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக கிரவுண்டில் ரவுண்ட் அடிக்கத் தயார்!’ என்று அறிவித்த பூனம் பாண்டேவை ஞாபகம் இருக்கிறதா? சீரியல் நடிகை மற்றும் மாடலான பூனம் பாண்டேவுக்கு இந்த அறிவிப்பால் கொலை மிரட்டல் உட்பட எக்கச்சக்க தொல்லைகள். வீட்டிலும் பெற்றோர்கள் கடுப்பு காட்ட, தனி வீட்டுக்கு மாற இருக்கிறார். 'எப்போ?’ என்கிற கிண்டல் கேள்விகள் விடாமல் தொடர் வதால், 'நான் எப்பவும் தயார்தான். ஆனா, சட்ட அனுமதி வாங்கிக் கொடுங்கள்!’ என்று அறிவித்திருக்கிறார் பூனம். அப்போ முடியாதுன்னு சொல்லுங்க!

இன்பாக்ஸ்

•  ' 'மர்டர்’ படக் கவர்ச்சிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முத்திரையும் பதிக்கவில்லை!’ என்கிற ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார் மல்லிகா. ஆனால், பதில் வார்த்தைகளால் அல்ல! 'திபிவி’ என்கிற ஃபேஷன் இதழுக்காக, மேலாடை இல்லா மோகினியாக ஒற்றை நெக்லஸ் மட்டும் அணிந்து மல்லிகா கொடுத்துஇருக்கும் போஸ்தான் பாலிவுட்டின் இந்த வார பூஸ்ட். அங்கம் மறைக்க தங்கம்!

•  முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீனுக்கும், பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் காதல் என்று செய்தி வந்து ஓய்ந்தது. இப்போது அதன் சீஸன் 2.  அசாருதீனின் மகன் அசாதுதீனுக்கும்  , ஜூவாலாவுக்கும் காதல் கசமுசா என்று கிசுகிசுக்கிறது மீடியா. ஜிம், கிரவுண்ட், தியேட்டர் என ஜூவாலா எங்கே சென்றாலும், நிழலாகப் பின் தொடர்கிறார் அசாதுதீன் என்று செய்தி சேனல்கள் அலறிக்கொண்டு இருக்கும்போதே, ஐதராபாத் ஐ.பி.எல் போட்டிக்கு ஜோடியாக வந்து அட்டென்டன்ஸ் கொடுத்தார்கள் இருவரும். அப்பா ஃபோர் அடிச்சா, பையன் சிக்சருக்கு விரட்டுறானே!

##~##

•  'Till the End of the World’ என்கிற பாப் பாடகி பியான்ஸ் நோவல்ஸின் அசத்தல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் எகிப்து ராணி வேடத்தில் நடிக்கிறார் பியான்ஸ். தன்னோடு இணைந்து ஆட அமெரிக்கா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட  நடன அழகிகளை ஒன்று திரட்டி இருக்கிறார் பியான்ஸ் நோவல்ஸ். உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் கிடைக்கும் பியான்ஸ்!

•  மே மாத 'கேன்ஸ்’ விருது விழாவில் பத்தாவது முறையாகப் பங்கேற்க இருப்பதால் சிறப்பான சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுமாம் ஐஸ்வர்யா ராய்க்கு. அதனால் இந்த முறை உலகின் டாப் டிசைனரைக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை வடிவமைக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ஐஸ். அசத்துங்க!

•  அதிக வருமானம் ஈட்டும் இளம் பெண்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார் 'ஹாரி பார்ட்டர்’ புகழ் எம்மா வாட்ஸன். சமீபத்தில் 21-வது பிறந்த நாள் கொண்டாடிய எம்மாவுக்கு 15 கோடி டாலர்களைக் கொட்டிக் கொடுத்து, விளம்பரத் தூதுவராக நியமித்து இருக்கிறது லான்கோம் அழகுச் சாதன நிறுவனம். யம்மா!

•  2011-ன் மிஸ் இந்தியா கனிஷ்தா தன்கர்! மும்பைப் பெண்ணாக இருந்தாலும் கனிஷ்தாவுக்கு நடுவர்களிடம் அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொடுத்தது சென்னை ஸ்பெஷல் பட்டுச் சேலைதான். எல்லாரும் சேலை கட்டுங்கோள்!

•  திவ்யா ஸ்பந்தனாவுக்கு விரைவில் கல்யாணம். அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பதால், வீட்டினர் எடுத்த அதிரடி முடிவாம் இது. ஃபேஸ்புக்கிலும் 'கமிட்டட்’ என்று மெசேஜ் தட்டிவிட்டார் திவ்யா. யார் அந்தப் 'பொல்லாதவன்’?

இன்பாக்ஸ்

•  சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கு புதுவரவு ஸ்பைடர் கேமரா. மைதானத்துக்கு மேல் கயிற்றில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கேமரா, போட்டி நடைபெறும்போதே ஸ்டெம்ப் முதல் பவுண்டரி எல்லை வரை எல்லா இடங்களையும் சுற்றிச் சுழன்றுவிட்டு, மீண்டும் உயரத்துக்கு வந்துவிடுமாம். எல்லாம் துட்டு!

இன்பாக்ஸ்

•  இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு விரைவில் திருமணம். சின்ன பிரிவுக்குப் பிறகு, காதலி இஷா ஷெர்வானியையே மணக்க இருக்கிறார் ஜாகீர். ''2007 உலகக் கோப்பை முடிந்ததுமே திருமணம் செய்யும் எண்ணம் இருந்தது. அப்போது மறுத்துவிட்டான். இப்போது உலகக் கோப்பையை வென்றதோடு, அதிக விக்கெட் களை வீழ்த்திய மகிழ்ச்சியான தருணத்தில் திருமணம் செய்வதுதான் சரி!'' என்கிறார் ஜாகீர் கானின் தந்தை பக்தீர் கான். கல்யாணத்துக்கு 'ஷெர்வானி’தானே ஜாகீர்?

இன்பாக்ஸ்

•  ''என்னிடம் மென்மையாகப் பேசினால் நானும் மென்மையாகப் பேசுவேன். முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்களிடம் நானும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வேன்'' என்கிறார் த்ரிஷா கோபமாக. தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, வரிசையை முந்தியதால் எழுந்த சர்ச்சைக்கு த்ரிஷாவின் விளக்கம் இது. ''அவர் நடிகைகளைப் பற்றி கேவலமாகப் பேசினார். அதனால்தான் நானும் சண்டை போட்டேன்!'' என்று ஆற்ற மாட்டாமல் புலம்பியபடியே இருக்கிறார் த்ரிஷ். ஹேய் த்ரிஷாகிட்டே சண்டை போட எப்படிப்பா மனசு வந்துச்சு?