உலகின் நம்பர் ஒன் சுட்டி... சூரி க்ரூஸ். ஹாலிவுட் நடிகர்கள் டாம் க்ரூஸ், கேட்டி ஹோல்ம்ஸின் செல்ல மகள் சூரிக்கு ஐந்து வயதுதான். சூரி நின்றால், நடந்தால், எல்லாமே நியூஸ்தான். சமீபத்தில் சூரியின் பர்த்டே கொண்டாட்டத்தை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து படம் எடுத்திருக்கிறார்கள், பாப்பராஸி போட்டோகிராஃபர்கள். லிட்டில் சூப்பர் ஸ்டார் ரெடி!

பார்பி டால் இலியானாவுக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் இடையே நடக்கும் சண்டை தான், டோலிவுட்டின் ஹாட் டாபிக். '''ஓம் சக்தி’ படத்தில் எனக்கு சொன்ன கதையை மாற்றி, ஜூனியருக்கு பில்டப் கொடுத்துக் கதையை மாற்றிவிட்டார்கள்'' என்றுஇலியானா சுடுசுடு பேட்டி கொடுக்க, ஜூனியருக்கு செம டென்ஷன். மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இலியானா முகத்தில் ஜூனியர் சிகரெட் புகையை ஊதினார் என்று சர்ச்சை. இலியானாவுக்கும் சோதனை வருமோ?!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வந்தபோது, இந்திய அரசு உரிய மரியாதை தரவில்லை என்று கோபப்பட்ட ராஜபக்ஷே, சித்து வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து பாதியிலேயே திரும்பும்படி இலங்கை வீரர்களை நிர்பந்தம் செய்தார் ராஜபக்ஷே. 'பாதியில் போனால், எந்த வீரருக்கும் சம்பளம் கிடையாது. இலங்கை கிரிக்கெட் வாரியத் துக்கும் பணம் வராது’ என இந்திய கிரிக்கெட் போர்டு ஒரு போடு போட, இலங்கை கிரிக்கெட் போர்டு கப்சிப். ஆனால், ஐ.பி.எல்லுக்குப் போட்டியாக எல்.சி.எல் (லங்கன் கிரிக்கெட் லீக்) போட்டிகளைத் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் போர்டு. இன்னும் அடங்க மாட்றீங்களே!

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் விஜய டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வரும் 'ஒரு தலைக் காதல்’ படத்தில், ஒரு பாட்டுக்குத் தன்னோடு சேர்ந்து ஆட, தன் மகன் சிம்புவை அழைத்தாராம். ஆனால், சிம்பு பிடி கொடுக்காமல் நழுவிவிட, அப்பாவுக்கு மன வருத்தம். அரைச்ச மாவை தோசை ஊத்துங்கப்பா!

கமர்ஷியல் பைலட் ஆவதற்காகப் பயிற்சி எடுத்த அஜீத், முறையாகத் தேர்ச்சி பெற்று லைசென்ஸும் வாங்கிவிட்டார். இப்போது பைலட் அஜீத், சொந்தமாக விமானம் வாங்க இருக்கிறாராம். சமீபத்தில் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய விமானத்துக்கு கொட்டேஷன் வாங்கியிருக்கிறார். அந்த வானத்தைப்போல!

வில்லியம்ஸ் திருமணம்தான், இப்போது சர்வதேசச் செய்தி. இங்கிலாந்தின் மேட்ரிமோனியல் வலைதளம் ஒன்று, 'வில்லியம்ஸுக்குப் பொருத்தமான இந்திய மணப் பெண் யார்?’ என்ற கருத்துக் கணிப்பு நடத்தியது. பெருவாரியான வாக்குகளுடன் தேர்வானவர் கேத்ரீனா கைஃப். வேலைவாய்ப்பு விசா எடுத்து, இந்தியாவில் தங்கி இருக்கும் கைஃபின் தாயகம் எது தெரியுமா? அதே இங்கிலாந்து. மிஸ் பண்ணிட்டீங்களே இளவரசி!

விஜய்யின் மகன் சஞ்சய்க்கு, கார்கள் மேல் அப்படி ஓர் ஆசை. பி.எம்.டபிள்யு, ஆடி, ஃபெராரி என 500-க்கும் மேற்பட்ட மினியேச்சர் கார்களை மகனுக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய். எலெக்ஷன் ரிசல்ட் எப்படி வரும் விஜய்?

பிரபல கேரள இயக்குநர் பிரசாந்த் மாம்புள்ளி, கன்னட நடிகர் சிவராஜ் குமாரை வைத்து இயக்கிய 'சுக்ரீவா’ படம் லிம்கா சாதனை படைத்திருக்கிறது. 18 மணி நேரத்தில், 600 பேர் தொடர்ந்து உழைத்து, படத்தையும் முடித்ததுதான் சாதனை. 100 நாட்களைக் கடந்து ஓடி, படம் வசூலிலும் சாதனை படைப்பது, சாதனை மேல் சாதனை!

ஆந்திரத் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்யம் கட்சி ஆரம்பித்து சூடுபட்டு, காங்கிரஸோடு இணைந்துவிட்ட சிரஞ்சீவிக்கு மீண்டும் சினிமா ஆசை. தன்னுடைய 150-வது படத்துக்குத் தயாராகிறார் சார். வாழ்க்கை ஒரு வட்டம்தானோ?

ஐ.பி.எல் சீஸன் 4 முழுக்க முத்த மழை. டெல்லி யில் நடைபெற்ற போட்டியின்போது, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடிய சித்தார்த் மல்லையா, கேமராவை மறந்து, பக்கத்தில் இருந்த அப்பாவை மறந்து, தீபிகா படுகோனோடு லிப் கிஸ் அடித்தார். இன்னொரு ஆட்டத்தில், ஹாலிவுட் நடிகையும் தன் காதலியுமான லிஸ் ஹர்லிக்கு வெற்றி முத்தம் கொடுத்து, ரசிகர்களை டென்ஷன் ஆக்கினார் ஷேன் வார்னே. கிரவுண்ட்ல ஆடுங்கப்பா!