Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  'பொன்னியின் செல்வன்’ படம் டிராப். 'பொன்னர் சங்கர்’, 'அரவான்’, 'ஏழாம் அறிவு’, 'மாவீரன்’, 'ராணா’ என கோடம்பாக்க சரித்திர ஃபீவரும், பட்ஜெட் பஞ்சாயத்தும்தான் காரணம் என்கிறார்கள். 'அலைபாயுதே’ பாணியில் ஃப்ரெஷ்ஷாக புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் மணிரத்னம். படத்தைப் பார்க்க இப்பவே மனசு அலைபாயுதே!

•  சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர் முரளி விஜய்க்கு நண்பர்கள் மத்தியில் செல்லப் பெயர் 'மாங்க்’! செம கலாட்டா பையனுக்குத் 'துறவி’ என்று பட்டப் பெயரா? விசாரித்தால், விடலைப் பருவத்தில் முரளி விஜய் 'மாங்க்’கின் தீவிர ரசிகர் என்று கண்ணடிக்கிறார்கள் நண்பர்கள். உண்மையா விஜய்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  தனுஷ் மகன் யாத்ரா, பெசன்ட் நகர் கடற்கரையில் தினம் அதிகாலை ஸ்கேட்டிங்  பயிற்சியில் ஈடுபடுகிறான். இனோவா காருக்குள் மங்கி கேப் அணிந்து அமர்ந்து, பேரன் ஸ்கேட் செய்யும் அழகைப் பார்த்து ரசிக்கிறார் தாத்தா ரஜினி. கடந்த வாரம் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று காலையும், பேரனு டன் பெசன்ட் நகரில் நேரம் செலவழித்து இருக்கிறார் ரஜினி. யாத்ரா, தாத்தாவைப் பார்த்துக்கோ!

இன்பாக்ஸ்

•  இந்த வருடம் நட்சத்திர ஹோட்டல் பக்கம் ஒதுங்காமல், வீட்டிலேயே சிம்பிளாகப் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டுவிட்டார் த்ரிஷா. மிகமிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி, விடிந்த பிறகும் தொடர்ந்திருக்கிறது. வயசு ஏற ஏற டவுசர் சின்னதாகுமோ?

இன்பாக்ஸ்
##~##

• 'எந்திரன்’ படத்தில் இருந்து தனது 'ரா-1’ படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக மிகவும் மெனக்கெட்டுக்கொண்டு இருக்கிறார்  ஷாரூக் கான். அவரது 22 வருட சினிமா வாழ்வில் முதல்முறையாக இந்தப் படத்தில் கரீனாவுக்கு லிப் கிஸ் கொடுப்பதுபோல நடித்திருக்கிறாராம் ஷாரூக். 'அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான், சயீஃப் அலி கான் என்று அனைத்து கான்களையும் கிஸ் அடித்த ஒரே இந்தி நடிகை நான்தான்!’ என்று பூரித்துக்கொண்டு இருக்கிறார் கரீனா. பங்களாதான் பங்களாதான்!

•  கர்நாடக முதல்வர் எடியூரப்பா ரிலாக்ஸ் மூடுக்குத் திரும்பிவிட்டார்போல. சமீபமாக, ''நான் அரசியலில் எது செய்தாலும், செய்யாவிட்டாலும் பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறீர்கள். ஆனால், நான் ஈடுபடும் கண்தானம், ரத்ததானம் போன்ற நல்ல காரியங்கள் செய்வதுபற்றி செய்தியே போடுவது இல்லையே... ஏன்?'' என பத்திரிகையாளர்களிடம் உரிமையோடு கேட்டு வருகிறாராம் முதல்வர். சென்சேஷன் வேணும் சார்... சென்சேஷன்!

•  இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில்

இன்பாக்ஸ்

87 கோடியுடன் முதலிடம் பிடித்திருப்பவர், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி! இரண்டாவது இடம், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு -

இன்பாக்ஸ்

44 கோடியாம்.

இன்பாக்ஸ்

6.09 லட்சத்துடன் கடைசி இடத்தில் இருப்பவர் மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங். தெரிஞ்சது கையளவு... தெரியாதது கடலளவு!

•  உலகின் '100 ஹாட் பெண்’களைப் பட்டியல் இட்டிருக்கிறது 'மேக்ஸிம்’ பத்திரிகை. உள்ளாடை விளம்பரம் மூலம் கவனம் கவர்ந்த மாடல் ரோஸி ஹன்ட்டிங்டனுக்கு முதலிடம். அமெரிக்க மாடல் மற்றும் டி.வி. நடிகை ஒலிவியா இரண்டாம் இடத்தை யும், ஹாலிவுட் நடிகை கேத்தி பெர்ரி மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். பட்டியலில் இந்தியப் பெண்கள் ஒருவரும் இல்லை. இங்கே 'வெரி ஹாட்’ பெண்கள்தான் இருக்காங்க!

•  'Really Virtual’ என்ற ட்வீட்டர் ஐ.டி. ஒரே இரவில் சர்வதேச கவனம் ஈர்த்துவிட்டது. பின்லேடனைக் கொல்லும் முயற்சியில் அமெரிக்கப் படைகள்தோட்டாக் களையும் குண்டுகளையும் சிதறடித்துக்கொண்டு இருந்தபோது, ஆபரேஷன் பின்லேடன் என்பதையே அறியாமல், 'என்னமோ... ஏதோ’ என்று ஒவ்வொரு அசைவையும் ட்வீட் செய்திருக்கிறார், பின்லேடன் வீட்டுக்கு இரண்டு கி.மீ. தொலைவில் வசித்துக்கொண்டு இருந்த ஷோயிப் அக்தர். பின்லேடன் கொலையை லைவ் காமென்ட்டரி செய்த நபர் என்ற பெருமை இப்போது ஷோயப் வசம். அந்த ட்வீட்களைத் தொடர்ந்து, அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டனவாம். ஒசாமாவுக்கு நன்றி!

•  தமிழில் படங்கள் இல்லாமல் தெலுங்குப் பக்கம் ஒதுங்கிய தமன்னாவுக்கு எடுத்த எடுப்பிலேயே பம்பர் ஹிட். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் நடித்த '100% லவ்’ சூப்பர் டூப்பர் ஹிட். ஸ்லிம் பியூட்டிக்கு வெயிட்டான வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. ஸ்டேட் மாறினாலும் ஸ்டேட்டஸ் மாறாது!

இன்பாக்ஸ்

•  ''ஹீரோக்களுடன் டூயட் பாடி, கட்டிப்புரளும் காட்சிகளில் நடித்து போர் அடிக்கிறது. லெஸ்பியன், பாலியல் தொழிலாளி போன்ற வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை!'' என்று அறிவித்திருக்கிறார் சமீரா ரெட்டி. அப்போ இனி, ஹீரோயின்களுடன் கட்டிப்புடி வைத்தியமா?!

இன்பாக்ஸ்

•  நிறுவனத்தைத் துவக்கியவர் ஓய்வு பெறும் சமயம், அவரது வாரிசுகள்தான் அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வருவார்கள். ஆனால், இந்த நடைமுறையில் அதிரடி மாற்றத்தைப் புகுத்தி இருக்கிறார்  இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தனது நண்பர்களுடன் இணைந்து துவக்கிய நாராயணமூர்த்தி, தனது 65-வது வயதில் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறுகிறார். நிறுவனத்தின் அடுத்த தலைவராக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் கே.பி.காமத் பதவியேற்பார் என அறிவித்து இருக்கிறார் நாராயணமூர்த்தி. நல்ல தலைமைக்கு இது அழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism