Published:Updated:

கே.பி.எஸ். சில நினைவுகள்

ப.சோழநாடன், சமஸ்படங்கள் உதவி: எஸ்.வி.ஜெயபாபு, எம்.ஆர்.ஜெயபால்

கே.பி.எஸ். சில நினைவுகள்

ப.சோழநாடன், சமஸ்படங்கள் உதவி: எஸ்.வி.ஜெயபாபு, எம்.ஆர்.ஜெயபால்

Published:Updated:
##~##

கொடுமுடி என்றால், 'உச்சம்’ என்று பொருள். கரூர் அருகில் உள்ள அந்தச் சின்ன ஊருக்கு இந்தப் பெயர் பொருந்துமோ,  இல்லையோ அங்கே பிறந்த ஒரு பெண்ணுக்கு ஏகப் பொருத்தம். தமிழ்க் கலை உலகில் பேரரசியாகத் திகழ்ந்த சுந்தராம்பாள் இங்குதான் 1908-ம் ஆண்டு பிறந்தார்!

•  வீட்டின் மூத்த பிள்ளை சுந்தராம்பாள். அடுத்து ஒரு தம்பி, ஒரு தங்கை. அப்பா இறந்ததும் குடும்பத்தைக் கவனிப்பார் இல்லை. ஒரு வேளை உணவுக்கே யாசகம் பெற வேண்டிய நிலை. பிள்ளைகளை ஆற்றுக்கு அழைத்துப் போனார் சுந்தராம்பாளின் தாய் பாலாம்பாள். குளிக்கும் சந்தோஷத்தோடு போன சுந்தராம்பாளுக்கு, ஆற்றில் அம்மா குதிக்கச் சொன்னதும் அதிர்ச்சி. ''உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜென்மத்துக்கு ஒரு வழியும் தெரியவில்லை. அதனால்தான் ஆற்றில் உங்களையும் தள்ளிவிட்டு, நானும் குதிக்க முடிவு எடுத்தேன்!'' என்று பாலாம்பாள் கதறியபோது, சுந்தராம்பாள் இப்படிச் சொன்னார்: ''அம்மா, இனி நீ அழாதே. நான் இருக்கும் வரை நீ அழ வேண்டியது இல்லை!''  -ஐந்து வயதுச் சிறுமி மேடை மேடையாகப் பாட வந்த பின்னணி இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.பி.எஸ். சில நினைவுகள்

•  சுந்தராம்பாள் முதன்முதலாக நடித்த நாடகம் 'நல்ல தங்காள்’. சின்ன வேஷம்தான். அது தொடங்கி, நாடகம் மீது பைத்தியம் ஆகிவிட்டது சுந்தராம்பாளுக்கு. அப்போது மெட்ராஸுக்குப் போனால்தான், நாடகத்தில் ஜொலிக்க முடியும். சுந்தராம்பாள், தன் தாயிடம் சொன்னார். அவர் சம்மதிக்கவில்லை. யாருக்கும் சொல்லாமல், ரயில் ஏறிவிட்டார் சுந்தராம்பாள். ஒரு வருஷத்துக்குப் பின் தாயும் மகளும் சந்தித்தபோது, நாடகத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தார் சுந்தராம்பாள். இதற்குள் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, அவருக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் முடித்துவிட்ட பாலாம்பாள், மகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தார் நம்ப முடியாமல்!

•  சுந்தராம்பாளைப் புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றது இலங்கைதான். முதல் முறை அவர் இலங்கைக்குச் சென்றபோது, கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் அங்கே தங்கி, நாடகங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் மீது ஏற்பட்ட அபிமானத்தால், இலங்கைத் தமிழர்கள் பலரும் தம் குழந்தைகளுக்கு சுந்தராம்பாள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்!

•  பொதுவாக, பாடகர்கள் மூன்றரைக் கட்டையில்தான் பாடுவார்கள். சுந்தராம்பாளோ சர்வ சாதாரணமாக ஐந்தரைக் கட்டையைத் தாண்டுவார். இது ஒரு பக்கம் நாடகத்தில் அவருக்குப் பெரிய பேரை வாங்கித் தந்தாலும், இன்னொரு பக்கம் அவருக்கு ஜோடி போட வந்த ராஜபார்ட்டுகள் எல்லாம் புஸ்வாணமாகிப் போனார்கள். 'அட, இந்தப் பொண்ணுக்கு இணையாகப் பாட ஒருத்தரும் இல்லையா?’ என்ற பேச்சு கிளம்பிய சமயம்தான், எஸ்.ஜி.கிட்டப்பா ஞாபகம் எல்லோருக்கும் வந்தது. சுந்தராம்பாளுக்கு இணையான ஐந்தரைக் கட்டை கந்தர்வக் குரலோன் கிட்டப்பா!

கே.பி.எஸ். சில நினைவுகள்

•  ''என்ன பெரிய கே.பி.எஸ்? மேடைக்கு வரட்டும், நான் பாடம் சொல்றேன்!'' - சுந்தராம்பாளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தபோது, அவருடைய புகழைச் சொல்லி தன்னைப் பயமுறுத்தியவர்களுக்கு கிட்டப்பா சொன்ன பதில் இது!

''கிட்டப்பா பெரிய பாடகராக இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு சளைச்சவள் இல்லை!'' - கிட்டப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தபோது, அவருடைய புகழைச் சொல்லித் தன்னைப் பயமுறுத்தியவர்களுக்கு சுந்தராம்பாள் சொன்ன பதில் இது!

•  ''நான் படுத்து இருந்தேன். 'உன்னைப் பார்க்க ராஜகுமாரன்போல ஒருத்தர் வந்து இருக்கார்’னு அம்மா சொன்னார். நான் எழுந்து உட்காருவதற்குள், அவர் மின்னல்போல வந்து என் அருகே கட்டிலில் உட்கார்ந்துவிட்டார். அவர் பேசினார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். எனது கந்தர்வன் வந்துவிட்டார் என்று என் மனசு சொல்லியது!'' - தங்களுடைய முதல் சந்திப்பு குறித்து சுந்தராம்பாள் பின்னாளில் கூறியது இது!

•  முதல் நாள் ஏகப் போட்டி. கிட்டப்பா, 'நீ தோற்பாய்’ என்று சவால்விட்டு இருந்தார். பதிலுக்கு 'நீங்கள் ஏமாந்துபோவீர்கள்’ என்று சொல்லி இருந்தார் சுந்தராம்பாள். அவர்களைப் போலவே, பார்வையாளர்களும் சரி பாதியாகப் பிரிந்துகிடந்தார்கள். இருவரும் மேடை ஏறினார்கள். நாடகம் முடிந்தபோது, ஒட்டுமொத்தப் பார்வையாளர் களும் ஒருமித்த குரலில் சொன்னது... 'இதுதான் சிறந்த ஜோடி!’

•  நாடகத்துக்காகச் சேர்ந்த ஜோடி வெகு சீக்கிரமே வாழ்க்கையிலும் சேர்ந்தது. கிட்டப்பா ஏற்கெனவே கல்யாணம் ஆனவர். ஆகையால், இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. ஆனால், இருவரும் ஒற்றைக் காலில் நின்று காரியம் சாதித்துக்கொண்டனர். பின் இருவரும் சேர்ந்து புது நாடக கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதித்த அந்த கம்பெனியின் பெயர் 'ஸ்ரீ நாடக சபா’!

கே.பி.எஸ். சில நினைவுகள்

•  அந்த நாட்களில் அதிக சம்பளம் வாங்கிய ஜோடி கிட்டப்பா - சுந்தராம்பாள் ஜோடிதான். ரங்கூனில் நாடகம் நடத்தப் போனபோது, சுந்தராம்பாளுக்குப் பேசப்பட்ட சம்பளம்

கே.பி.எஸ். சில நினைவுகள்

40,000. ரங்கூனில் நாடகத்துக்கு ஏற்பாடு செய்த சுல்தான், சுந்தராம்பாளை முன் பின் பார்த்தது இல்லை. நேரில் பார்த்தபோது தலையில் அடித்துக்கொண்டு அழுதார், ''இந்தக் கறுப்பிக்கா

கே.பி.எஸ். சில நினைவுகள்

40,000... எவன் பார்ப்பான், எப்படி வசூல் ஆகும்?'' என்று. ரங்கூனில் இருந்து சுந்தராம்பாள் திரும்பும்போது செலவுகள் கழிந்தது போக, சுல்தானுக்கு

கே.பி.எஸ். சில நினைவுகள்

3 லட்சம் சம்பாதித்துத் தந்திருந்தார் சுந்தராம்பாள்!

•  சுந்தராம்பாள் எவ்வளவு கறுப்போ, கிட்டப்பா அவ்வளவு சிவப்பு! நாடகத்தில் கிட்டப்பா பெண் வேஷம் கட்டினால், பெண்களுக்கே மோகம் வரும். அதேபோல் சுந்தராம்பாள் ஆண் வேஷம் கட்டினால், ஆண்களுக்கே தாகம் வரும்!

•  மேடைகளில் தெலுங்கு கொடி கட்டிப் பறந்த காலம் அது. போனால் போகிறது என்று கடைசியாகத் தமிழில் துக்கடா மட்டும் பாடுவார்கள். இந்தச் சூழலை உடைத்து, மேடைகளில் தமிழை வெற்றிகரமாக நிறுவியதில் கிட்டப்பா - சுந்தராம்பாள் ஜோடிக்குப் பெரும் பங்கு உண்டு. அதேபோல, கோயில் மேடைகளில் அந்தந்தக் கடவுளர்களின் பாடல் பாடும் மரபு உருவாகக் காரணம் சுந்தராம்பாள்!

•  நகமும் சதையுமாக என்பார்களே அதற்கு சரியான உதாரணம் கிட்டப்பா - சுந்தராம்பாள்தான். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள் இருவரும். ஆனால், நீண்ட காலம், இந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. புகழின் உச்சத்தில் குடிப் பழக்கம் கிட்டப்பாவை வாரிச் சுருட்டியது. கூடவே, கெட்ட சகவாசங்களும் சேர, இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஏட்டிக்குப் போட்டி நாடகம் நடத்தும் அளவுக்கு நிலைமை போனபோது, சுந்தராம்பாள் விட்டுக்கொடுத்தார். கிட்டப்பா பாதை திரும்ப எத்தனிப்பதற்குள் காலம் முந்திக்கொண்டது. வியாதி அவரைக் கொன்றுவிட்டது!

கே.பி.எஸ். சில நினைவுகள்

•  இவ்வளவும் 25 வயதுக்குள் நடந்துவிட்டது சுந்தராம்பாளுக்கு. அவ்வளவுதான் வாழ்க்கை என்று அவரும் முடிவு செய்துவிட்டார். கிட்டப்பாவின் மறைவுக்குப் பின் பாடுவது இல்லை என்ற முடிவில் இருந்தவரை, மீண்டும் கலை உலகுக்கு அழைத்து வந்தவர் மகாத்மா காந்தி. ''வீட்டிலேயே இருப்பதால், சாவித்திரியைப்போலத் தங்கள் கணவர் உயிரை மீட்டு வரும் சக்தி உங்களுக்கு வந்துவிடப் போகிறதா? தாங்கள் தேசத் தொண்டு செய்வதை நான் விரும்புகிறேன்'' என்று சுதந்திரப் போராட்ட பிரசாரப் பாடல்கள் பாட அழைத்தார் காந்தி!

•  தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் சாதனையை நிகழ்த்தியது சுந்தராம்பாளின் 'நந்தனார்’. சுந்தராம்பாள் அந்தப் படத்தில் வாங்கிய சம்பளம்

கே.பி.எஸ். சில நினைவுகள்

1 லட்சம்.  இந்தியாவில் முதன்முதலில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை இவர்தான். அப்போதெல்லாம்

கே.பி.எஸ். சில நினைவுகள்

50,000-ல் ஒரு படத்தையே முடித்துவிடலாம். 'நந்தனார்’

கே.பி.எஸ். சில நினைவுகள்

3 லட்சம் செலவில் உருவானது!

•  சுந்தராம்பாளின் கலை வாழ்வில் மறக்க முடியாத படம் 'ஒளவையார்’. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், சிவாஜியின் நினைவு வருவதுபோல, ஒளவையார் என்றால் சுந்தராம்பாளின் முகம் நினைவுக்கு வரக் காரணமான படம். ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பில் ஒரு மைல்கல் 'ஒளவையார்’. கிட்டத்தட்ட ஆறு வருஷத் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், மொத்தம் 48 பாடல்கள். சுந்தராம் பாள் மட்டும் 30 பாடல்கள் பாடி இருந்தார். படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் 'ஆனந்த விகடன்’ இதழில்  விமர்சனம் வெளியாகவில்லை. வாசகர்கள் கேள்விக் கணைகளால் துளைக்க, ''எங்கள் படத்தை நாங்களே மதிப்பிடுவது சரியாக இருக்காது!'' என்று சொல்லிவிட்டார் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். அப்புறமும் வாசகர்களின் கடித மழை தொடர, படம் பார்த்த ரசிகர்கள் எழுதிய விமர்சனங்களை வெளியிட்டது விகடன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்த விமர்சனங்கள் வெளியாகின. அத்தனை அபார வரவேற்பு!

•  மொத்தம் 11 படங்கள் நடித்தார் சுந்தராம்பாள். 1964-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். தனது பிறந்த ஊரான கொடுமுடியில் 1964-ல் ஒரு திரை அரங்கம் கட்டினார். பெயர்: கே.பி.எஸ்!

கே.பி.எஸ். சில நினைவுகள்

•  இந்தியாவிலேயே முதன்முதலாக திரைத் துறையைச் சேர்ந்த ஒருவர் மேலவை உறுப்பினராகப் பதவியேற்ற வரலாறும் சுந்தராம்பாளுடையதுதான். தனது பதவிக் காலத்தில் கிடைத்த ஊதியம் அவ்வள வையும் பொதுச் சேவைக்கே செலவிட்டார்!

•  தன்னுடைய தவக் குரலால் ஒரு காலத்தையே கட்டிப்போட்ட சுந்தராம்பாள் 1980-ல் இறந்தபோது, கிட்டத்தட்ட அவர் நினைத்த எல்லாவற்றையுமே சாதித்து இருந்தார். ஒரே ஒரு மனக்குறைதான். குழந்தை இல்லை. கிட்டப்பா - சுந்தராம் பாள் தம்பதிக்குப் பிறந்த ஒரே ஆண் குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. ஆனால், அவர் வாழ்ந்த காலம் வரை ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி, எல்லோராலும் அம்மாவாகவும் பாட்டியாகவும்தான் கொண்டாடப்பட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism