என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

கடந்த வார பிரான்ஸ் திரைப்பட விழாவில் அசத்தியது இந்திய நடிகைகள்தான். சல்மா ஹைக், ஏஞ்சலினா ஜோலி என ஹாலிவுட் பிரபலங்களை மிஞ்சும் வகையில், சிவப்புக் கம்பளத்தில் செம ஜொலிஜொலிப்பாக வலம் வந்தார்கள் ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், சோனம் கபூர், மினிஷா லம்பா உள்ளிட்ட இந்தியத் தேவதைகள். நாட்டுல என்ன நடந்தாலும் இவங்க சிவப்புக் கம்பளத்துல நடக்குறதை நிறுத்த மாட்டாங்களோ!

இன்பாக்ஸ்
##~##

அம்மா ஆகப் போகிறார் ஷில்பா ஷெட்டி. இந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறக்கலாம். 'வீட்டில் குழந்தை அறை தயாராக இருக்கிறது. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை!’ என்கிறார் ஷில்பா சந்தோஷமாக. கர்ப்பமாக இருக்கும்போது 'நியூட் போஸ்’ கொடுக் கும் ஃபேஷனை ஆரம்பிச்சு வெச்சுடாதீங்க!

 உதயநிதி ஸ்டாலின் விலை உயர்ந்த சூப்பர் கார்களை நிறுத்துவதற்கு என்றே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பண்ணை வீடு வைத்திருக்கிறார். விலை கோடிகளில் எகிறும் 'மஸராட்டி’, 'ஹம்மர்’ உள்ளிட்ட 19 கார் கள் அங்கு அணிவகுத்து நிற்கின்றன. அரசாங்க கார் எதுவும் இருக்காதே!

 தேர்தல் முடிவுகள் வெளியாகி 'அ.தி.மு.க. அபார வெற்றி’ என்று செய்திகள் ஊர்ஜிதப்படுத் திக்கொண்டு இருந்த நேரத்தில், கருணாநிதியைச் சந்தித்தாராம் ஸ்டாலின். பல நிமிடங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளாமல் மௌனமாக இருந்த பிறகு, கிளம்ப யத்தனித்தாரம் ஸ்டாலின். அப்போது மென்மையான குரலில் 'கனி மொழியைப் பத்திரமா பார்த்துக்கப்பா!’ என்று மட்டும் சொன்னாராம் கருணாநிதி. நோ கமென்ட்ஸ்!

இன்பாக்ஸ்

 'டபாங்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க இருப்பதால், சல்மான் கானைச் சந்தித்து டிப்ஸ் கேட்க விரும்பினாராம் சிம்பு. ஆனால், 'நேரம் இல்லை’ என்று சிம்புவைச் சந்திக்க மறுத்து விட்டாராம் சல்மான். காரணம், யாருக்கும் டிப்ஸ் தருவது சல்மானுக்குப் பிடிக்காதாம். படத்துல சல்மானுக்கு எதிரா பஞ்ச் வைங்க சிம்பு!

 சாய்னா நெஹ்வாலுக்கு அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார் அவரது அம்மா உஷா நெஹ்வால். ''மகள் விருப்பப்படியே காதல் திருமணம்தான். ஆனால், சாய்னா இப்போது யாரையும்காதலிக்க வில்லை!'' என்கிறார் உஷாராக. டைம்டேபிள் போட்டுக் காதலிப்பாங்க போல!

 'பிறந்த’ நாள் கொண்டாட்டத்தை அதன் முழு அர்த்தத்தோடு கொண்டாடி இருக்கிறார் பாப் ஸ்டார் லேடி காகா. 25-வது பிறந்த நாள் கொண்டாட்ட பார்ட்டியில் போதை அதிகமான ஒருகட்டத்தில், ஹோட்டல் வராண்டாவில் 'பிறந்த மேனி’யில் ஓடி அதிர்ச்சி அளித்திருக்கிறார் காகா. 'என்னை மறுபடியும் சிறுமியாக உணர்ந் தேன்!’ - போதை தெளிந்ததும் காகா அடித்த விளக்கம் இது. ஆஹா... ஆஹா!

இன்பாக்ஸ்

 'பாசமலர்’ படத்துக்கு இது பொன் விழா ஆண்டு. 1961-ன் மே மாத இறுதியில் வெளியான இப்படம் ஆறு மாதங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சாதனை புரிந்தது. படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மலரும் நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறி ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறார். வாடாத மலர்!

 சித்தார்த் மல்லையாவின் பிறந்த நாள் பார்ட்டியில் தீபிகா படுகோன் கலந்துகொண்டாலும், அங்கு அனைவரையும் ஈர்த்தது ஏச்சாலா ஜான்சன் என்ற மாடல்தான். கிங்ஃபிஷர் காலண்டர் மாடலான இவர்தான் தீபிகாவின் முன்னாள் காதலர் ரன்பீர் கபூரின் இப்போதைய கேர்ள் ஃப்ரெண்ட். ஒரு வகையில தூரத்துச் சொந்தம்தான்!

 அண்ணன் வில்லியம்ஸ் தேன் நிலவில் இருந்து திரும்பவில்லை, அதற்குள் தம்பி ஹாரிக்குக் காதல் கல்யாணம் என்று ஸ்கூப் தூள் பறக்கிறது இங்கிலாந்தில். ஹாலிவுட் நடிகை சார்லிஸ் தெரோன் உடன் ஈஷிக்கொண்டு இருக்கும் ஹாரி மேல் அரண்மனை வட்டம் கடுகடுப்பில் இருக்கிறது. காரணம், அம்மணி ஹாரியைவிட ஒன்பது வயது சீனியராம். அம்புட்டு அவசரமா?

இன்பாக்ஸ்

 உலகின் அழகான 50 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் அலிசன் ஸ்டோக். 22 வயதான அமெரிக்காவின் போல் வால்ட் வீராங்கனையான அலிசன், அழகிகள்பாரம் பரியப்படி விளையாட்டில் பெரிய சாதனை ஒன்றும் நிகழ்த்தியது இல்லை. அவங்க விளையாட வந்ததே சாதனைதானே!

 பாலிவுட்டில் எப்போதும் சல்மானும் ஷாரூக்கும் கீரியும் பாம்புமாகவே முறைத்துக் கொள்வார்கள். ஆனால், சல்மான் கானுடன் நடித்த ஜோரிலேயே அடுத்து ஷாரூக் கானுடன் நடிக்க இருக்கிறார் அசின். சேத்தன் பகத்தின் '2 ஸ்டேட்ஸ்’ நாவலைத்  தழுவி எடுக்கப்படும் படத்தில் ஷாரூக்குடன் நடிக்கும் போட்டியில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், வித்யா பாலன் ஆகியோரை ஓரங்கட்டி இருக்கிறார் அசின். பொழைக்கத் தெரிஞ்ச புள்ள!

இன்பாக்ஸ்

அமலா பால் முதுகில் பக்கம் பக்கமாக மூன்று மச்சங்கள் இருக்கின்றன. 'ஒரே இடத்தில் மூன்றும் இருப்பது என்னவோ போல் தெரியும். ஆபரேஷன் செய்து அகற்றப் போகிறேன்!’ என்று அமலா பால் சொல்ல, 'அதுதான் குட்டி உனக்கு ராசி. இப்போதைக்கு எதுவும் செய்யாத!’ என்று அவரை அடக்கிவிட்டாராம் அவரது அம்மா. மச்சக் கன்னி!