Published:Updated:

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

என்.சுவாமிநாதன்

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

என்.சுவாமிநாதன்

Published:Updated:
##~##

சிவதாணு பிள்ளை... இந்தியாவின் பாதுகாப்பு நாயகன்!

டெல்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation-DRDO) தலைமை அதிகாரி. இந்திய எல்லையைப் பாதுகாக்கும் அக்னி, பிரமோஸ், ப்ரித்வி போன்ற ஏவுகணைகள், போர் விமானங்கள், டாங்கிகள் எல்லாவற்றையும் வடிவமைத்து ராணுவத்திடம் ஒப்படைப்பது இந்த நிறுவனம்தான். ஒட்டு மொத்த இந்தியாவின் பாதுகாப்பையும் கையில் வைத்திருப்பவர் கடந்த வாரம் நாகர்கோவில் வந்திருந்தார். அந்தச் சந்திப்பில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

''இந்தியாவுக்காக நிறைய ஏவுகணைகளை உருவாக்கி இருக்கீங்க... உங்களுக்குப் பிடிச்ச ஏவுகணை எது?''

''இந்தியா-ரஷ்யா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ். இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி, ரஷ்யாவின் மோஸ் நதி... இவற்றின் பெயரைச் சேர்த்துவெச்சதுதான் பிரமோஸ். இந்த இரண்டு ஆறுகளுக்கும் ஒரு ஆச்சர்ய ஒற்றுமை உண்டு. அமைதியா இருந்தா, விவசாயப் பாசனம் மூலம் வளம் கொழிக்கவைக்கும். வெள்ளம் வந்தா, ஆக்ரோஷமா சீறிப் பாய்ஞ்சு கரைகளை உடைச்சிடும். அதுபோலத்தான் பிரமோஸ்! ஒலியைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பாயும். அடுத்த கட்டமா, அதை ஏழு மடங்கு அதிக வேகத்தில் பாயச் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கோம். இப்போதைய பிரமோஸ் ஏவுகணையை எதிர்க்கும் ஏவுகணையை, எந்த நாடும் இதுவரை கண்டுபிடிக்கலை. ஏழு மடங்கு வேகத்தில் பாயும் பிரமோஸை உருவாக்கிட்டா, அதைத் தடுத்து நிறுத்த அவங்களுக்கு இன்னும் 30 வருஷங்கள் தேவைப்படும்!''

''இந்தியாவைவிட பாகிஸ்தான் அதிக அணுகுண்டுகள் வைத்திருப்பதாக 'விக்கிலீக்ஸ்’ இணையதளம் தகவல் சொல்கிறதே?''

''இது காந்தி பிறந்த அஹிம்சை பூமி. அதனால், போர் முறைகளில் நமக்கு நாமே பல கட்டுப்பாடுகளை வெச்சிருக்கோம். 'எந்த ஒரு நாடும் அணு ஆயுதம் இல்லாம நிராயுதபாணியாக இருந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது’ என்பதுதான் நம் கொள்கை. அதே மாதிரி, எந்த இக்கட்டான சூழலிலும் முதலில் அணு ஆயுதத்தை நாம் பயன்படுத்த மாட்டோம். அதே நேரம், நம் மீது யாரேனும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ளும் ஆயுத பலம் நம்மிடம் தாராளமாகவே இருக்கிறது!''

''உங்கள் அடுத்த இலக்கு?''

''அக்னி-5... இப்போது உள்ள அக்னி-3 சுமார் 3,500 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும். அக்னி-5... 5,000 கி.மீ. தூரம் பாய்ந்து குறி தவறாமல் இலக்கைத் துவம்சம் பண்ணும்!''  

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

''இந்தியாவின் பாதுகாப்புக்காக சுகோய்-30 விமானங்களை ரஷ்யாவில் இருந்துதான் வாங்குகிறோம். இந்தியாவிலேயே எப்போது சொந்தமாக போர் விமானங்களை உருவாக்கப்போகிறோம்?''

''ஆரம்பத்தில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிட்டு இருந்தோம். இப்போ சுகோய் விமானத்தை நாமே சொந்தமாக நாசிக்கில் உருவாக்கத் துவங்கி இருக்கோம். ரஷ்யாவின் சுகோயில் இன்னும் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி இருக்கோம். நாம் உருவாக்கி உள்ள சுகோய் விமானத்தில், இன்ஜினை நினைத்தபடி நகர்த்திவைக்கலாம். இந்த வசதி ரஷ்ய சுகோய் விமானத்தில் கிடையாது!''

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

''அணு ஆயுதங்களுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் நம்மிடம் இருக்கிறதா?''

''ஓ... இருக்கிறதே! அந்தக் கப்பலுக்கு அரிஹன்ட் (arihant) என்று பெயர். அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி அது. பொதுவாக, நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசலில் இயங்கும். இதனால் வெளிவரும் புகை நீர்மட்டத்துக்கு மேல் நீர்க் குமிழிகளாக வெளிவரும். இதை வைத்து நீர்மூழ்கியின் நடமாட்டத்தை எதிரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள். அணுசக்தியால் இயங்கும்போது, புகை வருவது இல்லை. எரிபொருள் நிரப்ப அடிக்கடி மேலே வரவும் தேவை இல்லை. கடலுக்கு அடியிலேயே பல வாரங்கள் தொடர்ந்து இருக்க முடியும். நமது நீர்மூழ்கியின் இருப்பிடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது!''

''சீனாவோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவின் ராணுவப் பலம் வலுவாக இருக்கிறதா?''

''தரைப் படையில் நம்மைவிட சீனர்கள் கூடுதல் சோல்ஜர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த இடைவெளியை நாங்கள் உருவாக்கிய ப்ரித்வி ஏவுகணை மூலம் நிரப்பலாம். பொதுவாக, ஏவுகணைகள் ஒரே பாதையில் பயணம் செய்து தாக்கும். எங்கே இருந்து வருகிறது, எதைத் தாக்கவிருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பிரித்வி பாம்பைப்போல வளைந்து, நெளிந்து பாதையை மாற்றிக்கொண்டே பாயும். இது செல்லும் திசையை யாராலும் கணிக்க முடியாது. இந்திய ராணுவத்தின் பலமே இதுபோன்ற உயர் தொழில்நுட்பம்தான்!''

''மக்கள் பயன்பாட்டுக்கு எதுவும் கண்டுபிடிச்சிருக்கீங்களா?''

''சீனர்களுக்கு ப்ரித்வி பதில் சொல்லும்!''

''போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி கள் பயன்படுத்தும் நடைக் கருவி மூன்று கிலோ எடை இருக் கும். அதை அணிந்து நடப்பது ஊனத்தின் வலியைவிட வேதனையானது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் அந்த நடைக் கருவியை 300 கிராமில் வடிவமைச்சு இருக்கோம். பூகம்பம் ஏற்படும் காலங்களில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க ஹைட்ரோபோன் கருவியைக் கண்டுபிடிச்சிருக்கோம். இடிபாடுகளில் சிக்கியுள்ள மனிதர்களின் மூச்சு சத்தத்தைவெச்சு, அவர்களை இந்தக் கருவி காட்டிக் கொடுக்கும்!''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism