Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம்... வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித். மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் 12 வயது ஜேடனின் சம்பளம் 40 கோடி.  விளம்பரங்களில் நடிக்க மட்டும் 20 கோடியாம். குழந்தைத் தொழிலாளி தடுப்புச் சட்டம் இங்கே செல்லாதே!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  'தி பிக்கெஸ்ட் லாசர்’ என்னும் புகழ் பெற்ற அமெரிக்க டி.வி. ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள இருக்கிறார் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும், ஹாட் மாடலுமான அன்னா கோர்னிகோவா. இந்த ரியாலிட்டி டி.வி. ஷோவில் கலந்துகொள்பவர்கள், எவ்வளவு சீக்கிரம் தங்கள் எடையைக் குறைக்கிறார்கள் என்பதுதான் நிகழ்ச்சி. 'ஐந்தே நாட்களில் 10 கிலோ எடை குறைப்பேன்’ என்று சவால்விட்டு இருக்கிறார் செக்ஸி அன்னா. அழகைக் குறைச்சுக்காதீங்க!

•  'மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்த மம்தா பானர்ஜி கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 184 எம்.எல்.ஏ-க்களில் 69 எம்.எல்.ஏ-க்கள் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 33 பேர் கோடீஸ்வரர்கள்!’ என்று புள்ளிவிவரங்களோடு, பொறுப்பான எதிர்க் கட்சியாக மக்களிடம் முறையிட ஆரம்பித்து இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். காலம் கடந்திருச்சு காம்ரேட்ஸ்!

இன்பாக்ஸ்

•  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தின் மகனுமான அனிருத்தா ஸ்ரீகாந்த்துக்கு சீக்கிரமே கல்யாணம். கல்லூரித் தோழியாக அறிமுகமான காதலி ஆர்த்தியை மணக்கவிருக்கிறார் அனிருத்தா. கல்யாணத்துக்கு சச்சின் வருவாகளா?  

இன்பாக்ஸ்

•  11 வயது சார்லே க்ரெய்க், இங்கிலாந்தின் லேட்டஸ்ட் சென்சேஷன். பளு தூக்குதலில், இத்தனை சின்ன வயதிலேயே 50 கிலோ எடையை ஈஸியாகத் தூக்கும் சார்லே, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது உறுதி என்று இப்போதே கொண்டாடுகிறது பிரிட்டன் மீடியா. இரும்புக் குழந்தை!

இன்பாக்ஸ்

•  இங்கிலாந்து அரண்மனையில் வலது கால்வைத்த கேத் மிடில்டனைவிட, அவரது தங்கை பிப்பா மிடில்டனை உலகம் உற்று நோக்கத் துவங்கி இருக்கிறது. பிப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ட்வீட்கள் குவிய, ட்விட்டர் சர்வரையே சிறிது நேரம் ஷட்-டவுன் செய்து சிஸ்டத்தை மீட்டனராம். சர்வருக்கு நிறைய டிப்ஸ் கொடுங்கப்பா!

இன்பாக்ஸ்

•  பிறந்த நாள் கொண்டாடுவது இயக்குநர் பாலு மகேந்திராவின் வழக்கம் அல்ல. ஆனால், சமீபத்தில் பாலு மகேந்திராவின் 60-வது பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ். இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுகா, நா.முத்துக்குமார் என சிஷ்யர்கள் பலரும் வந்து, 'ஹேப்பி பர்த்டே’ பாட, வாத்தியாருக்கு செம குஷி! வாத்தியார் வாழ்க!

இன்பாக்ஸ்
##~##

•  இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரோனுடன் இணைந்து லண்டன் பல்கலைக்கழக மாணவர் அணியை எதிர்த்து டேபிள் டென்னிஸ் விளையாடினார். ஆரம்பத்தில் பாயின்ட்களை அள்ளிய ஒபாமா - கேமரோன் ஜோடி உற்சாகமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, இரண்டாவது ரவுண்டில் சொதப்பலாக ஆடத் துவங்க, மீடியா மக்களை உடனே வெளியே அனுப்பிவிட்டார்களாம். எல்லாமே போங்கு ஆட்டம்தானா?

•  ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசைக் குழுவுக்குப் பெயர்... 'சூப்பர் ஹெவி’. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மிக் ஜோஹர், பாப் மார்லேவின் இளைய மகன் டேமியன், பாடலாசிரியர்கள் ஸ்வீடர்ட், ராஸ் ஜோன்ஸ் என ஐந்து பேர் இணைந்து துவக்கி இருக்கும் இந்த இசைக் குழுவின் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. ''சர்வதேச இசையுடன் நம் ஊர் இசையும் இணைந்து இசைக்கும்!'' என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹெவி மியூஸிக் சாம்பியன்ஸ்!

•  பிரேசில் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ, உடல் எடையைக் குறைக்கத் திணறியே விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். கால்பந்தில் காலை வாரிய உடல் எடை ஹாலிவுட்டில் அவரை மிரட்டல் வில்லனாக்கிஇருக்கிறது. 'ஓப்பன் ரோடு’ என்னும் படத்தில் மொட்டைத் தலை, குறுந்தாடியுடன் டெரர் காட்டியிருக்கிறார் ரொனால்டோ! வெயிட்டான வில்லன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism