ஸ்பெஷல் -1
Published:Updated:

விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!

விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!

##~##

லகத்தின் பெரியண்ணனாக தனக்குத்தானே சிம்மாசனம் இட்டுக்கொண்டு, உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி வருகிறது அமெரிக்கா. அந்த அமெரிக்காவையே சில நாட்கள் தூக்கமின்றி நடுங்கவைத்தவர் 'விக்கிலீக்ஸ்’ இணையதளத்தின் ஜூலியன் அசேஞ்ச். சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களை விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவுகொண்டதாக லண் டனில் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். ஆனால், அவர் வெளியிட்ட அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் போர்க்குற்ற ஆவணங்கள் இணையதளங்களில் இன்னமும் உயிருடன்தான் உலவிக் கொண்டு இருக்கின்றன.

 'போர்க் களத்தில் முதலில் பலியாவது உண்மைதான்’ என்பார்கள். முதல் இரண்டு உலகப்போர்கள், யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் நாஜி நடவடிக்கைகள், வியட்நாம் யுத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு, உலகம் பேரழிவைச் சந்தித்தது இராக், ஆஃப்கன் மற்றும் இலங்கை யுத்தங்களில்தான். 'நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான யுத்தம்’ என்ற பெயரில் அமெரிக்கா தனது அத்துமீறல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வரும் நிலையில்தான், அதன் உண்மையான முகத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. 2010 ஜூலை 25... இதுதான் அமெரிக்கக் கழுகின் தொண்டையில் அதிர்ச்சி முள் குத்திய தினம். அன்று தான் ஆஃப்கானில் 2004 முதல் 2010 வரையில் அமெரிக்கா நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து 76,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. அனைத்தும் யுத்த முனையில் அமெரிக்க ராணுவத்தினர் பரிமாறிக்கொண்ட அதிகாரப்பூர்வமான ராணுவக் குறிப்புகள். யாராலும் மறுக்க முடியாத உண்மைகள்!

விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!

'இராக் வார் லாக்’ என்ற தலைப்பில் சிறைக் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், போரின்போது ஆயுத நடவடிக்கைகளுக்குத் தொடர்பு இல்லாத லட்சக்கணக்கான சிவிலியன் களைக் கொலை செய்தது, போர் முடிந்த பின்னும் அமைதி நடவடிக்கை என்ற பெயரில் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்கள் என அதிர்ச்சிகரமான பல ஆவணங்களைத் தொடர்ந்து வெளியிட்டது விக்கிலீக்ஸ். 2004 தொடங்கி 2010, ஜனவரி 1 வரை  முதல் கட்டமாக 3,91,831 ஆவணங்களை வெளியிட்டது. இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மைப்பற்றி அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்ட கன் முதலில் கருத்து சொல்ல மறுத்துவிட்டாலும், பிறகு 'இதை எல்லாம் வெளியிட்டால், நாட்டின் வெளி உறவில் பிரச்னைகள் வரும்’ என ஜூலியன் அசேஞ்சிடம் கெஞ்ச வேண்டியிருந்தது.

விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!

அமெரிக்கா, இராக் மீது தொடுத்த யுத்தத்தில் 1,09,032 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள், இராக் படையைச் சேர்ந்தவர்கள் 15 ஆயிரத்து 196 பேர். கூட்டுப் படைகளை சேர்ந்தவர்கள் 3,771 பேர் என்பவை விக்கிலீக்ஸ் ஆவணங்களின் சில துளி உண்மைகள். 'இராக் பாடி கவுன்ட்’ என்ற அமைப்பு 1,07,000 முதல் 1,22,000 இராக்கியர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று சொல்லிவந்தது. கிட்டத்தட்ட அந்தக் கணக்கும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ள கணக்கும் சரியாகப் பொருந்துகி றது. வரலாற்றில், இனி காண முடியாத படு கொலையை நடத்தி முடித்த இலங்கையைப் பற்றியும் சில ஆவணங்களை வெளியிட்டு இருக்கிறது விக்கிலீக்ஸ். 1986 முதல் 2010 வரை கொழும்பில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத் கேபிள் மூலம் 3,325 ஆவணங்களை வெளியே எடுத்து இருக்கிறது விக்கிலீக்ஸ். அவற்றில், 2009 மே 19-ல் அதாவது, இலங்கைப் போர் முடிவுக்கு வந்த தினம் பற்றியும், ஜனவரி 26, 2010-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தல்பற்றிய தகவல்களும் அடக்கம்.

சமகால உலக ஊடகத் துறையில் இதுதான் உச்சகட்ட சாத்தியம். உலகின் மனித உரிமையாளர்கள் மத்தியில் ஜூலியன் அசேஞ்ச் ஹீரோவாகி இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையிலும்கூட விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து இயங்குகிறது. உலகெங்கும் 20-க்கும் அதிகமான சர்வர்களில் பராமரிக்கப்படும் விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு பெயர் அறிவித்துக் கொள்ளாத பல நூறு மறைமுக ஊழியர்கள் பல நாடுகளில் உண்டு. நூற்றுக்கணக்கான இணைய முகவரிகளில் செயல்படும் விக்கிலீக்ஸ் இவ்வள வுப் பிரச்னைகளுக்குப் பிறகும் தொடர்ந்து இயங் குகிறது. இதில் ஈடுபட்ட யாரேனும் இணையதளத்தை அழிப்பது அல்லது இணையதளம் என்ற

விசில் ப்ளோயர் விக்கிலீக்ஸ்!

ஒன்றையே இல்லாமல் செய்வது... இது இரண்டின் மூலம் மட்டுமே விக்கிலீக்ஸை முடக்க முடியும் என்கிறார்கள். அந்த அளவுக்கு உலகம் முழுக்க விரவியுள்ள தொழில்நுட்ப கில்லிகள் இதை நிர்வகிக்கின்றனர்.

ஜூலியன் அசேஞ்ச்தான்... இப்போது உலகின் சாகசக்கார மனிதர். சொந்தமாக வீடுகூட இல்லாத இவர், உலகின் நம்பர் ஒன் நாட்டின் அயோக்கியத்தனங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆனால், அமெரிக்க ரகசியங்கள் அம்பலப்படுவது வரலாற்றில் இது முதல்முறைஅல்ல;  வியட்நாம் யுத்ததில் அமெரிக்காவின் போர்க் குற்றங்களை எல்ஸ்பெர்க் என்ற பேராசிரியர், நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் மூலம் வெளிக்கொண்டு வந்தார். அதேபோல், குவான்டனாமோ சிறைச்சாலை, அபுகிரைப் சிறைச்சாலைக் கொடுமைகள், நடுக்கடலில் கப்பலில் போர்க் கைதிகளைச் சித்ரவதை செய்வதற்காக அமெரிக்கா உருவாக்கிய மிதக்கும் சிறைச்சாலைகள் என அமெரிக்காவின் பல பயங்கர முகங்கள் பலமுறை வெளிவந்து இருக்கின்றன. இதன் உச்சகட் டத்தை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அதை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். குற்றச்சாட்டுக்கு ஆளான நாடுகள் எந்தக் குற்ற உணர்வும் இன்றி இயங்குகின்றன. மற்ற நாடுகள் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருக்கின்றன. இந்த அபாயகரமான மௌனம்தான் எல்லா வற்றைவிடவும் ஆபத்தானது!

ரீ.சிவக்குமார், ந.வினோத்குமார்