சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி படம் வருகிறது...!

கடந்த 2015 ஆம் ஆண்டு, பிப்ரவரியில் எம்.எஸ்.ஜி என்ற பெயரில் படம்  ஒன்று வெளியானது. அதில் நடித்தவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்ற ஆன்மீக குரு. முழுக்க முழுக்க ஒரு கருத்தை 'ப்ரப்பொகேண்டா' பாணியில் எடுக்கப்பட்டிருந்த  இந்த படத்தின் அடுத்த பாகம் எம்.எஸ்.ஜி 2, 2015 ஆம் ஆண்டின் செப்டம்பரில் வெளியானது. அதன் மூன்றாம் பாகம், இம்மாதம் ஏழாம் தேதி வெளியானது. 


இந்த மூன்றாம் பாகத்தின் சக்சஸ் மீட்டில் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' பற்றிய படம் எடுக்கப்போவதைப் பற்றி  பேசும்போது, ராம் ரஹீம் சிங்,'நம் நாட்டில் நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி சிலர் சந்தேகிக்கின்றனர். அப்படி சந்தேகிப்பவர்கள் கூட இந்த படத்தைப் பார்த்த பிறகு தங்களது எண்ணத்தை மாற்றி கொள்வர். இந்த படத்தை இருபத்தி ஐந்தே நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.' என்றார். 2015இல் வெளியான ராம் ரஹிம் சிங்கின் எம்.எஸ்.ஜி படத்தைப் பாருங்கள். சர்ஜிகல் ஸ்டிரைக் எப்படி சித்தரிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளலாம்.


 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!