கோல்டன் குளோபில் திரையிடப்பட இருக்கும் ‘சில சமயங்களில்’ படத்தின் டிரெய்லர்..! | Sila Samayangalil movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (25/10/2016)

கடைசி தொடர்பு:15:47 (25/10/2016)

கோல்டன் குளோபில் திரையிடப்பட இருக்கும் ‘சில சமயங்களில்’ படத்தின் டிரெய்லர்..!

காஞ்சிவரம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் 'சில சமயங்களில்'. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் திரைப்படம் பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. ஆனால், 'சில சமயங்களில்' படம் ரிலீஸ் ஆகும் முன்பே கோல்டன் க்ளோப் விருதுக்கு சென்றுள்ளது. கண்டிப்பாக கோல்டன் க்ளோப் விருது இந்த திரைப்படத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர், படக்குழுவினர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

சில சமயங்களில் படத்தின் டிரெய்லரைக் காண:

 

 

சமீபத்தில் வெளியான படங்களின் டிரெய்லர்களைக் காண

நீங்க எப்படி பீல் பண்றீங்க