வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (01/11/2016)

கடைசி தொடர்பு:13:11 (02/11/2016)

ஒல்லியா இருந்தாத்தான் நடிக்கணுமா..!

34 வருடங்களுக்கு முன்னால் விசுவின் இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடிக்க ஹிட் அடித்த படம் 'மணல் கயிறு'. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது, எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடிப்பில் வெளிவர உள்ளது. 


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின், 'பொதுவா எங்க அப்பாகிட்ட வந்து என்னை பற்றி பேசறவங்க, உங்க பையன் குண்டா இருக்கான். உங்க பையன் கொஞ்சம் வெயிட் குறைக்கணும், அப்டின்னு சொல்றது நான் கேட்டிருக்கேன். நானும், இந்த விஷயத்தை பற்றி நிறைய யோசிச்சேன். இந்த படத்துக்காகவே நான் இருபது கிலோ எடை குறைச்சிருக்கேன்.' என்று கூறினார்.


முதல் பாகத்தில் நடித்த விசு மற்றும் எஸ்.வி.சேகர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க