Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• ''ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல இசையமைப்பாளரே இல்லை. அவர் ஒரு நல்ல சவுண்ட் இன்ஜினீயர். அவர் ஆஸ்கர் விருதுகளைப் பணம் கொடுத்து வாங்கினார்'' எனக் குற்றம்சாட்டினார் இந்தி இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார். ரஹ்மான் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கொந்தளித்துவிட்டது ஆஸ்கர் அகாடமி. இஸ்மாயில் தர்பார் மீது பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது ஆஸ்கர் அகாடமி. ஓவர் வாய் உடம்புக்கு ஆகாது!

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

•  மாடலிங்கில் ஆதிக ஆர்வம் கொண்டவர் டோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத். பைக் விளம்பரப் படம் ஒன்றில் 'ஒரு பெண்ணோடு ரவுண்டு அடிக்க வேண்டும்!’ என்று விளம்பர நிறுவனம் டோனியிடம் சொல்ல, 'என் மனைவியே அந்தப் பெண்ணாக இருக்கலாமா?’ என்று கேட்டு இருக்கிறார் டோனி. டபுள் ஓ.கே. சொன்ன விளம்பர நிறுவனம், டோனிக்கு டபுள் சம்பளமும் கொடுத்திருக்கிறது. ஒரே பைக்ல ரெண்டு மாங்கா!

• பாண்டிச்சேரியின் கடற்கரை வீதிக்கு வருபவர்கள் இது பாண்டிச்சேரியா அல்லது மும்பையா என்று குழம்பி விடுவார்கள். ஒரு மாதமாக பாண்டிச்சேரியின் கடற்கரை வீதி மும்பை சிட்டி போல ஜொலிஜொலிக்கிறது. மும்பை போல போலீஸ் டிராஃபிக் போர்டுகள், இந்தியில் அறிவிப்புப் பலகைகள் என எங்கும் இந்தி வாசம். அமீர்கான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடப்பதுதான் பாண்டிச்சேரியின் மும்பை எஃபெக்ட்டுக்குக் காரணம். பாண்டிச்சேரியில் ஒரு இந்திக் காலம்!

• அமெரிக்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிப்பது அமெரிக்காவின் பாரம்பரியம். ஆனால், கடந்த வாரம் அமெரிக்காவுக்கு வருகை தந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு 7-ஸ்டார் ஹோட்டலில் வைத்து அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்தளிக்க, பல தரப்பில் இருந்தும் ஒபாமாவுக்குக் கண்டனங்கள். ''லிபியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ஜெர்மனி எதிர்ப்புத் தெரிவித்தது. மனக் கசப்பில் இருக்கும் ஜெர்மனியுடன் நட்பு பாராட்டவே, ஃப்ரெண்ட்லியாக ஹோட்டலில் வைத்து விருந்தளித்தேன்'' என்று தன் ப்ளானை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் ஒபாமா. என்னமா யோசிக்கிறாரு ஒபாமா?

இன்பாக்ஸ்

•  சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார் சித்தார்த் மல்லையா. அவருக்குப் பிறந்த நாள் பரிசாக சித்தார்த்தோடு தான் சேர்ந்து எடுத்த படங்களை ஒன்றுசேர்த்து டிஜிட்டல் ஆல்பமாக்கிப் பரிசளித்து இருக்கிறார் தீபிகா படுகோன். அவ்ளோதானா?

• தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக, டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது சுற்றுலாத் துறை. மகாபலிபுரத்தில் பெரும்பாலும் வெளிநாட்டினர் வந்து நீண்ட நாள் தங்குவார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பவர்கட் காரணமாக வெளிநாட்டினரின் வருகை 50 சதவிகிதம் குறைந்துவிட்டது. மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை 15 ஆயிரம் வெளிநாட்டினர் மகாபலிபுரத்துக்கு வந்து செல்வார்கள். அது கடந்த ஆண்டு 5 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. இதனால் ஏக வருத்தத்தில் இருக்கிறார்கள் சுற்றுலாத் துறை அதிகாரிகள். பவர்கட்டுக்கு பவரை கட் பண்ணுங்கப்பா!

இன்பாக்ஸ்

• ராகுல் காந்தியின் ரகசிய விசிட்டுகளால் படாதபாடு படுகிறார்கள் உத்தரப்பிரதேச போலீஸார். சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்துக்கு ராகுல் ரகசியமாக வந்து சென்றார். இதனால் கடுப்பான மாயாவதி, அந்த ஏரியாவில் பணிபுரிந்த அத்தனை உளவுத் துறை காவலர்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டார். ராகுல் விசிட்டால் இப்படி போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதோடு மூன்றாவது முறை. ராகுல் அளவுக்கு உளவுத் துறை வொர்த் இல்லையோ?

இன்பாக்ஸ்

•  செப்டம்பர் மூன்றாம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா-வெனிசுலா நாடுகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டியில் பங்கேற்க வருகிறார் அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி. இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்காக, 22 கோடி ரூபாயை டெபாசிட் கட்டியிருக்கிறது, போட்டியை நடத்தும் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம். மெஸ்ஸியைக் காண லட்சக் கணக்கில் கூட்டம் வரும் என்பதால், ஆரம்பக் கட்டணமே ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆயிரம் இருந்தாலும் மெஸ்ஸிக்காகக் கொடுக்கலாம்!

இன்பாக்ஸ்

• நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கையையே சினிமாவாக எடுக்க இருக்கிறார். ''சொந்த வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை அப்படியே இந்தப் படத்தின் மூலம் சொல்ல இருக்கிறேன். எனக்குத் துரோகம் செய்தவர்களை இந்தப் படத்தின் மூலம் அடையாளம் காட்டுவேன்'' என்கிறார் சோனா. ஆன்னா ஊன்னா... இதையே சொல்றாங்க சோனா!

• 'எந்த அமைச்சரும் தங்கள் விருப்பப்படி பி.ஏ. மற்றும் டிரைவர்களை நியமித்துக்கொள்ளக் கூடாது. கட்சித் தலைமைதான் நியமிக்கும்’ என கார்டனில் இருந்து எல்லா அமைச்சர்களுக்கும் உத்தரவு பறந்திருக்கிறது. 'அமைச்சர்களைக் கண்காணிக்கத்தான் இந்த நடவடிக்கை’ என்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் புதிய அமைச்சர்கள். அம்மான்னா சும்மா இல்லீங்கோ!

இன்பாக்ஸ்

• வரும் டிசம்பரில் ஸ்பின் மன்னன் ஹர்பஜன் சிங்குக்குக் கல்யாணம். நீண்ட நாள் காதலியும் இந்தி நடிகையுமான கீத்தா பஸ்ராதான் மணமகள். 'டிசம்பர்தான் ராசியான மாதம்’ என்று ஜோசியர் சொல்லிவிட்டதால், டிசம்பரில் தேதி குறித்து இருக்கிறார் ஹர்பஜன். சிங்கம் மாதிரி நடந்துக்கணும் சிங்!