Published:Updated:

எகிறுது டோனியின் மார்க்கெட்!

சார்லஸ்

##~##

லகக் கோப்பை வெற்றி, ஐ.பி.எல்.  சாம்பியன்ஸ் என வெற்றிகளை ஒருபக்கம் டோனி துரத்திக்கொண்டு இருக்க, மறுபக்கம் கோடிகள் டோனியைத் துரத்திக்கொண்டு இருக்கின்றன. விளம்பர உலகில் செல்வாக்கு மிக்க 'டாப் 50’ விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரஃபேல் நடால், கோப் பிரையன்ட் ஆகியோரை முந்தி டாப் டென் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார் டோனி.

இங்கிலாந்தின் 'ஸ்போர்ட்ஸ் ப்ரோ’ பத்திரிகை 'எந்தெந்த விளையாட்டு வீரர்களைவைத்து விளம்பரம் செய்தால் கோடிகள் கொட்டும்’ என 'டாப் 50’ விளையாட்டு வீரர்களின் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. அதில் தென் கிழக்கு ஆசியாவின் நம்பர் ஒன் விளம்பர நட்சத்திரமாக மகேந்திர சிங் டோனி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 'ஸ்போர்ட்ஸ் ப்ரோ’ பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷ்னன், ''இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின், விளம்பர நிறுவனங்கள் மத்தியில் டோனி யின் புகழ் பன்மடங்கு பெருகிவிட்டது. இந்தியாவில் சச்சின் அளவுக்கு டோனிக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும், விளம்பர நிறுவனங்களின் நம்பர் ஒன் சாய்ஸாக டோனிதான் இருக்கிறார்'' என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எகிறுது டோனியின் மார்க்கெட்!

'டாப் 50’ விளையாட்டு வீரர்கள் லிஸ்ட்டில் உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரது விளம்பர கான்ட்ராக்ட் மதிப்பு, 1,400 கோடி. (மற்றவர்களின் கான்ட்ராக்ட் மதிப்பைப் பெருமூச்சுவிடாமல் படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்!) அமெரிக்கக் கூடைப் பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாம் இடம்பிடிக்க... கால்பந்து வீரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸிஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்து இருக்கின்றனர். கார் ரேஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஐந்தாவது இடமும், கூடைப் பந்தாட்ட வீரர் கார்மெலோ ஆண்டனி ஆறாவது இடமும் பிடித்து இருக்கின்றனர். ஃபார்முலா-1 கார் ரேஸ் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் ஏழாவது இடமும், உலகின் நம்பர் ஒன் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் எட்டாவது இடமும் பிடித்திருக்கின்றனர். டாப் டென்னில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெண் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி. டென்னிஸில் நம்பர் ஒன் இடம் பிடித்த கரோலின் இங்கே ஒன்பதாவது இடம் பிடித்திருக்கிறார்.  

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதுவென்ற இந்தியாவின் யுவராஜ் சிங் 49-வது இடம் பிடித்திருக்கிறார். நம்பர் ஒன் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்த லிஸ்ட்டில் இல்லை!