கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’..! | Gnanavel Raja to release Gautham karthik next "HaraHaraMahadevaki"

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (07/11/2016)

கடைசி தொடர்பு:12:15 (07/11/2016)

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’..!

கௌதம் கார்த்திக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும் நடிக்கும் படம் ‘ஹர ஹர மகாதேவகி’. சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்த புதிய படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ டைரக்டர் சரவணின் உதவி இயக்குநர் ஆவார்.

இப்படத்தின் படபிடிப்பு வருகிற 23-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை வெளியிடுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க