Published:Updated:

நாரதகான சபாவில் மனித வெடிகுண்டு!

ப.திருமாவேலன்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்

##~##

சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயில் கர்ப்பக்கிரகத்துக்குப் பின்னால் வெடி குண்டுகளை வெள்ளையர்கள் பதுக்கி வைத்திருப்பதாக வேலு நாச்சியாருக்குத் தகவல் வந்தது.  

''வெள்ளையர் வைத்துள்ள ஆயுதங் களையும் வெடிகுண்டுகளையும் அழிக் காமல் நாம் வெல்ல முடியாது!'' என்று சொன்ன வேலு நாச்சியாரால், ஆயுதக் கிடங்கு இருக்கும் ராஜேஸ்வரி கோயி லுக்கு அருகில் போகவே முடியாது. ஆனால், அழித்தாக வேண்டும். எப்படி என்று யோசித்தவர் கண்டெடுத்த வழிதான் 'மனித வெடிகுண்டு’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாரதகான சபாவில் மனித வெடிகுண்டு!

ஆண்டுக்கு ஒருமுறை நவராத்திரி அன்று மட்டும், அதுவும் பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக கோயிலைத் திறந்துவிடுவார்கள் வெள்ளையர்கள். அந்த நாளில், இந்த மனித வெடி குண்டை வேலு நாச்சி அனுப்பினார். அதற்காக அவர் தேர்வு செய்த பெண், குயிலி!

கையில் அகல் விளக்கு ஏந்திய 16 பெண்கள் ராஜேஸ்வரி கோயிலுக்குள் சென்று அம்மனை வணங்குகிறார்கள். குயிலி தன் கையில் இருந்த அகல் விளக்கு எண்ணெயைத் தன் தலையில் ஊற்றிக்கொள்கிறாள். அடுத்து ஒவ்வொரு பெண் ணிடமும் உள்ள விளக்கை வாங்கி எண்ணெ யைத் தன் மீது ஊற்றிக்கொள்கிறாள். கடைசி யாகத் தனது உடலில் நெருப்பை வைத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்குக்குள் குதிக்கிறாள். சிவகங்கையில் குயிலி அலறிய சத்தம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலித் தது. (குயிலியாக நடித்த பிரியதர்ஷினி முகத்தில் உயிரை அர்ப்பணிக்கும் தீர்க்கம்!)

நாரதகான சபாவில் மனித வெடிகுண்டு!

300 ஆண்டுகளுக்கு முந்தைய அதிர்வுகளை சென்னை நாரதகான சபாவில் நடந்த 'வீரத் தாய் வேலு நாச்சியார்’ நாடகத்திலும் உணர முடிந்தது!

''எங்கள் அன்னையர் மறைப்பால் தந்தது
மறப் பால்! - அது வெறும் பால் அல்ல
தமிழ்ப் பால் என்று  சொல்லுக
வெள்ளையர்பால்!''

நாரதகான சபாவில் மனித வெடிகுண்டு!

- ஸ்ரீராம் சர்மாவின் பாட்டு நித்யஸ்ரீ மகாதேவன் குரலில் ஒலிக்க... மேடையில் நின்ற மணிமேகலை, அச்சு அசலாக வேலு நாச்சியாராகவே கர்ஜித்தார். ''மணிமேகலை மிக மிக அழகான பெண்'' என்று பத்மா சுப்பிரமணியம் பாராட்டினார். அழகைவிடத் தூக்கலாகவே கம்பீரம் தெறித்தது அவரிடம்!

ஸ்ரீராம் சர்மாவின் சூடான வார்த்தைகள் வசனங்களாக வந்து விழ விழ... மொத்தப் பார்வையாளர்களும் கைத்தட்டலால் அரங்கத்தையே அசைத்தார்கள். இதில் வரலாறு, கலை இரண்டும் சரிசமமாக இருந்தது.அதைவிடத் தூக்கலாக அரசியல் தெறித்தது!

''விட்ட மண்ணைத் தொட்டுவிட்டோம்
தொட்ட மண்ணை மீட்டுவிட்டோம்
தாயகம் எமதாகும்
தாயகம் எமதாகும்!''

- என்று முடியும்போது, நாட்டில் நடக்கப் போகும் போராட்டத்துக்கான முன்னேற்பாடு மாதிரியே இருந்தது. அதற்கு ஏற்பவே இந்த நாடகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வைகோ செய்திருந்தார். ''மூன்று வருடங்கள் வேலு நாச்சியார் பற்றி நான் ஆய்வு செய்து இந்த நாடகத்தைத் தயாரித்தேன். ஒருநாள் வைகோவை நண்பர் பத்ரி மூலமாகச் சந்தித்தபோது, நாடகம்பற்றிச் சொன்னேன். 'நாடகத்தை நீங்கள் தயாரியுங்கள். மொத்தச் செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் வைகோ'' என்று சொல்கிறார் ஸ்ரீராம் சர்மா. வேலு நாச்சியாராக நடித்த மணிமேகலை... இவரது மனைவி!

''வைகோ ஏன் இதைக் கையில் எடுக்கிறார்?''

நாரதகான சபாவில் மனித வெடிகுண்டு!

''வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேலு நாச்சியாருக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன. நாட்டைவிட்டு வெளியேறி எட்டு ஆண்டுகள் கழித்து படை நடத்தி வந்து, நாட்டைக் கைப்பற்றி ஆண்டவர் வேலு நாச்சியார். அவரைப்போலவே பிரபாகரனும் வருவார்; வெல்வார். அந்த உணர்ச்சியை ஊட்டுவதற்காக நாடு முழுவதும் இந்த நாட்டிய நாடகத்தை நடத்திக் காட்டுவோம்!'' என்கிறார் வைகோ!

அரங்கத்தைவிட்டு வெளியே செல்லும் அனைவர் மனதிலும் ஒலிக்கிறது அந்தப் பாட்டு.

'தாயகம் எமதாகும்... தாயகம் எமதாகும்!’