பெண்களுக்கு எதிரான எண்ணங்களை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது - ஐஸ்வர்யா தனுஷ்! | Can not to be changed womens against thoughts in overnight

வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (18/11/2016)

கடைசி தொடர்பு:10:07 (18/11/2016)

பெண்களுக்கு எதிரான எண்ணங்களை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது - ஐஸ்வர்யா தனுஷ்!

பெங்களூருவில் உலக பெண்கள் அமைப்பின் சார்பாக பிஷப்காட்டன் ஆண்கள் பள்ளியில் “அவனுக்காக அவள்' என்ற பெயரில் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா தனுஷ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் நலனுக்கான நல்லெண்ண தூதரான ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டது  அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா தனுஷ், ''ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண் குழந்தைகளின் நலனுக்கான முயற்சிகள் தொடங்கப்படவேண்டியது அவசியம். குழந்தைகளின்  நலன் குறித்து அவர்கள் வளரும்போதே புரிய வைப்பது நமது கடமையாகும். பெண்களுக்கு எதிரான எண்ணங்களை உலகம் முழுவதிலும் ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. எனவே, குழந்தைகள் வளரும் பொழுதே, அதாவது சிறு வயது முதலே ஆண்-பெண் இரு பாலரும் சமம் என்கிற கருத்தை விதைக்கவேண்டியது அவசியம். 

பெண்களுக்கு எதிராக சமீபத்தில் உடல்ரீதியான தாக்குதலுடன், உளவியல் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான எதிர்மறையான எண்ணங்கள் மாறுவது அவசியம். இந்த மாற்றத்தை ஒரு தாய்தான் தனது வளர்ப்பின் வாயிலாக கொண்டு வர முடியும்' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க