கவுண்டமணியின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை..!

கவுண்டமணி எப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டாரோ, அப்போதிலிருந்து அவரின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரவ ஆரம்பித்து விட்டன. அதே போல் கடந்த சில நாட்களாக கவுண்டமணி இறந்து விட்டதாக செய்திகளும், படங்களும் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அவையெல்லாம் பொய் என்றும், தற்போது கவுண்டமணி பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சசிக்குமார் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சசிக்குமார், இந்த தகவலை அளித்தார்.

அவர், கவுண்டமணியின் உடல்நலம் குறித்து வீணாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். 
 

படங்கள்:ஆ.முத்துக்குமார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!