குழந்தை வளர்ப்பு என்பது இயற்கையாகவே வரும்- அபிஷேக் பச்சன்!


பாலிவுட் ஸ்டார் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதில் எந்த பலனும் இல்லை. அது நேரத்தை வீணாக்கும். எதிர் காலத்தை நினைத்தும் புலம்பத் தேவையில்லை. நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருப்பதை சரியாக செய்தாலே நம் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால் அந்த படத்தில் நாம் நன்றாக உழைக்கவில்லை என்று அர்த்தம். அதுவே, ஒரு படம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் நம்முடைய உழைப்பை அந்த படத்தில் நிறைவாக கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம். இதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதை பற்றி கேட்ட கேள்விக்கு, நானும், ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிப்பதை விரும்புகிறோம்.  அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிக்கத் தயார் என்று கூறினார். அதற்குப்பிறகு மகள் குறித்த கேள்விக்கு, ஆராத்யா பிறந்த பிறகு நல்ல பெற்றோராக நடந்து கொண்டிருக்கிறோம். வளர்த்து வருகிறோம். நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். குழந்தை வளர்ப்பு என்பது இயற்கையாகவே வரக் கூடியது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என சொல்லி வருகிறேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!