வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (23/11/2016)

கடைசி தொடர்பு:14:03 (24/11/2016)

பைரவாவுடன் மோதும் கத்தி சண்டை..!

தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கத்தி சண்டை திரைப்படம், பட வேலைகள் சரிவர முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. நவம்பர் அல்லது டிசம்பருக்குள் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கத்தி சண்டை படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும்  பைரவா படமும் பொங்கலுக்குத் தான் திரைக்கு வர இருக்கிறது. விஜய்,விஷால் படங்கள் ஒரே நாளில் வெளிவருவது இது முதல் முறை அல்ல. 2014-ம் ஆண்டு தீபாவளிக்கு கத்தி மற்றும் பூஜை படங்களும் 2007-ம் ஆண்டு பொங்கலுக்கு போக்கிரி,தாமிரபரணி படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க