வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (24/11/2016)

கடைசி தொடர்பு:15:02 (24/11/2016)

அஜித், விஜய் ரசிகர்கள் தயாராகயிருங்கள்..!

தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த படங்களை மறுபடியும் திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோவாக திரையிடுவது தான் தற்போதைய டிரெண்ட். அந்த வகையில் தீபாவளியன்று கபாலி, தெறி மற்றும் நவம்பர் 10-ம் தேதி வேதாளம் என சில படங்களை ஸ்பெஷல் ஷோவாக போட்டு கல்லா கட்டிய தியேட்டர் உரிமையாளர்கள், தற்போது அடுத்த ஆட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்கள்.

வருகிற ஆங்கில புத்தாண்டு அன்று விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும், அஜித் நடித்த வீரம் படத்தையும் திருநெல்வேலி, ராம் முத்துராம் தியேட்டரில் திரையிடவுள்ளனர்.

டிசம்பர் 31-ம் தேதி இரவு 9.30 மணிக்கு துப்பாக்கி படமும் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு வீரம் படமும் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு காட்சிகளுக்கான முன்பதிவு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க