Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  தாவூத் இப்ராஹிம் கேரக்டரில் நடிக்க அக்ஷய் குமார் தில்லாக 'ஓ.கே.’ சொல்லிவிட்டார். ஆனால், நடிகைகள்தான் ஃபீவரில் இருக்கிறார்கள். சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா என ஒவ்வொருவரும் கழண்டுகொள்ள, இப்போது இலியானா விடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். சம்பளம் வர்றதுக்கு முன்னாடி போன் வரும்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்ரே பலவிங் தனது 18-வது பிறந்த நாளில் 'உலகின் மிகக் குள்ள மனிதர்’ என்னும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன் சாதனை படைத்திருந்த நேபாள நாட்டின் கஜேந்திராவைவிட (26.4 இஞ்ச்) ஜீன்ரே மூன்று இஞ்ச் குறைவானவர். இருந்தாலும், 18-வது பிறந்த நாளுக்காகக் காத்திருந்து, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் பார்ட்டி. எல்லாம் 'ஜீன்’தான்!

இன்பாக்ஸ்

•  திவ்யா ஸ்பந்தனாவின் முதுகில் புது டாட்டூ ஒன்று இடம் பிடித்து இருக்கிறது. தன்னுடைய காதலர் ப்ளஸ் சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ரஃபேலின் பெயரை ஹீப்ரூ மொழியில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார் திவ்யா. 'டாட்டூதான் இப்போ... கல்யாணம் இப்போ இல்லை!’ என்று ஸ்டேட்மென்ட் விட்டுஇருக்கிறார் திவ்யா. தொழிலதிபர்கள்தொல்லை தாங்க முடியலப்பா!

இன்பாக்ஸ்

•  ''பய்ச்சுங் பூட்டியா உள்ளிட்ட இந்திய கால்பந்து அணியில் இருக்கும் முக்கால்வாசி ப்ளேயர்களுக்கு வயதாகிவிட்டது. அவர் களுக்கு ஓய்வு கொடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறும்'' என்று கருத்து சொல்லிஇருக்கிறார் இந்திய அணியின் புதிய பயிற்சி யாளர் அர்மாண்டோ. இதனால் செம கடுப்பில் இருக்கிறார்கள் சீனியர் ப்ளேயர்கள். கோச் சொன்னா, கோச்சுக்காதீங்கப்பா!

• சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'டூ’ படத்தின் கேசட்  ரிலீஸ் ஃபங்ஷனில் கலந்து கொண்டார் டி.ராஜேந்தர். 'யார், எப்போது, எந்த இடத்துக்குப் போவார்கள் என்று சொல்ல முடியாது. மன்மோகன் பிரதமர் ஆவார் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? அவர் பிரதமர் ஆகிவிட்டேன் என்று சொன்னபோது, அவரது மனைவி பாங்கரா டான்ஸ் ஆடி இருப்பார்’ என்று அதிரடித் தகவல் சொன்ன டி.ஆர், மேடையிலேயே ஆடிப்பாடி, மன் மோகனைப் போல மிமிக்ரி செய்து கலாய்த்து இருக்கிறார். இதனால், டி.ஆர். மேல் சுடுசுடு கோபத்தில் இருக்கிறார்கள் கதர் பார்ட்டிகள். மன்மோகனோட 'டூ’ விட்டுட்டீங்களா டி.ஆர்?

இன்பாக்ஸ்
##~##

•  ஜூலை மத்தியில் ரிலீஸாக இருக்கும் 'டெத்லி ஹாலோஸ்’ ஹாரிபாட்டர் வரிசையின் கடைசிப் படம். இதனால் உலகம் முழுக்க இருக்கும் ஹாரிபாட்டர் ரசிகர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களை கூல் பண்ண, ஹாரிபாட்டர் என்சைக்ளோபீடியா, வீடியோ கேம்ஸ் ஆகியவைகொண்ட ஒரு வெப்சைட்டை ஆரம்பிக்க இருக்கிறார் ஜே.கே.ரௌலிங். மந்திரத்தால் மாங்காய் பழுக்குது!

•  இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பறந்து பறந்து திருமணம் செய்துகொண்ட லிஸ் ஹர்லி - அருண்நாயர் தம்பதிக்கு அதிவேகமாக விவாகரத்து தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஹர்லி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் பக்காவாக இருந்ததால், 92 விநாடிகளில் டைவர்ஸ் அறிவித்து இருக்கிறது லண்டன் கோர்ட். அடுத்ததாக ஷேன் வார்னேவைத் திருமணம் செய்ய இருக்கிறார் ஹர்லி. குதூகலமா இருந்த குடும்பத்துக்குள்ளே கும்மியடிச்சிட்டீங்களே வார்னே!

•  சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை  வைத்து 'மஹதீரா’ மகா ஹிட் கொடுத்த ராஜமௌலி இயக்கும் 9-வது படம்... 'ஈகா’. காதலனை வில்லன் கொன்று விட, இறந்த காதலன் 'ஈ’யாக மாறி வில்லன் குரூப்பை ரிவெஞ்ச் எடுப்பதுதான் கதையாம். பிரகாஷ்ராஜ், சமந்தா, சந்தானம் என நம் ஊர் ஆட்களும் உண்டு. ஈயடிச்சான் காப்பி இல்லையே?

இன்பாக்ஸ்

•  ''தேசிய விருதுக்கு அனுப்பி இருந்தால் எனக்கு விருது கிடைத் திருக்கும் என்பதால், அமீர் 'பீப்ளி லைவ்’ படத்தை அனுப்பவில்லை'' என்று அமீர் கான் மேல் சரமாரியாகக் குற்றம்சாட்டி இருக்கிறார் 'பீப்ளி லைவ்’ படத்தின் இயக்குநர் அனுஷா ரிஸ்வி. ''விருதுகள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் கொடுக் கும் வெற்றிதான் எனக்கு விருது'' என்று பதில் சொல்லியிருக்கிறார் அமீர். ஆஸ்கர் விருதுக்கு லகானை அனுப்புனீங்களே பாஸு!

•  ஆகஸ்ட்டில் மும்முனை மோதலுக்கு ரெடியாகிறது கோலிவுட். சூர்யாவின் 'ஏழாம் அறிவு’, விஜய் யின் 'வேலாயுதம்’, அஜீத்தின் 'மங்காத்தா’ மூன்று படங்களும் ஆகஸ்ட் ரிலீஸ் என்பதால், தியேட்டர்கள் பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். த்ரீ ஹீரோஸ்!

•  ஸ்பின் பவுலர் அஸ்வினின் திருமணத்துக்காக நவம்பரில் மூன்று முகூர்த்த நாட்களை செலெக்ட் செய்திருக்கிறார் அவரது அப்பா. கிரிக்கெட் டூர் அட்டவணை இறுதியானவுடன் திருமணத் தேதி முடிவாகிவிடும். தோழி ப்ரீத்தி நாராயணை மணப்பதாகச் சொன்னவுடனேயே வீட்டில் ஓ.கே. சொல்லிவிட்டார்களாம். 'பெற்றோர்கள் திருமணத்துக்கு மறுப்பு’ என்று வந்த செய்தி வதந்தியாம். வாழ்த்துகள் மாப்ளே!

•  க்யூபா புரட்சி மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து மூன்று ஆண்டுகள் சே குவேரா எழுதிய டைரியைச் சமீபத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தகவல் கேள்விப்பட்ட உடனே, உடல்நிலை சரி இல்லாதபோதும், சே குவேராவின் குறிப்புகளை வாங்கிப் படித்து மெய்சிலிர்த்து இருக்கிறார் காஸ்ட்ரோ. சிவப்பு நண்பேன்டா!

இன்பாக்ஸ்

•  ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதினைப் பற்றிய ஹாட்  நியூஸ்களுக்குப் பஞ்சமே இல்லை. சமீபத்தில் தன்னுடைய பர்சனல் போட்டோகிராஃபராக ரஷ்யாவின் ஹாட் மாடல் யானா லாபிகோவாவை நியமித்து இருக்கிறார் புதின். யானா எடுக்கும் படங்களைப் பார்ப்பதைவிட, அவரைப் பார்க்கக் கூட்டம் கும்முவதால், அரசு நிகழ்ச்சிகளில் எக்கச்சக்கத் தள்ளுமுள்ளுகள் நடக்க ஆரம்பித்து இருக்கின்றன. ஒரு போட்டோவே போட்டோ எடுக்கிறதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism