வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (28/11/2016)

கடைசி தொடர்பு:11:16 (28/11/2016)

டிசம்பர் 1ல் தொடங்குகிறது, செல்வா-சந்தானம் படம்..!

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 1-ம் தேதி, ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

தற்போது செல்வராகவன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வேலைகளிலும், சந்தானம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தின் வேலைகளிலும் மும்மரமாக இருக்கிறார்கள்.

இந்த இரு படங்களின் வேலைகளையும் முடித்துவிட்டு இருவரும் இணையவுள்ளனர். காதலும் காமெடியும் கலந்து, செல்வா-சந்தானம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியையும் மற்றுமொரு புதுமுகத்தையும் அணுகிவருகிறார்களாம்.

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜாவே இந்த படத்துக்கும் இசையமைக்க வாய்ப்பு இருக்கிறதாம். விரைவில் அதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க