வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (28/11/2016)

கடைசி தொடர்பு:12:30 (28/11/2016)

பாகுபலி-2 ரிலீஸ் தேதி மாற்றமா..?

பாகுபலி-2 படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதியில் ரிலீஸ் செய்யத்திட்டமிட்டிருந்த படக்குழு, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இணையத்தில் வெளியாகிவிட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறதாம். அதனால் படத்தை முடிந்தளவுக்கு விரைவாக வெளியிடும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், அதனை ஒரு தரப்பினர் மறுத்துள்ளனர். ஏனென்றால், படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறதாம். படப்பிடிப்பு முடிந்த பின்னர் க்ராபிக்ஸ் வேலைகள் பல இருக்கும், இயக்குநர் ராஜமௌலி க்ராபிக்ஸ் காட்சிகளின் தரத்தில் எப்போதுமே சமரசம் செய்து கொள்ள மாட்டாராம். அதனால், அறிவித்த தேதியிலேயே படம் வெளிவர அதிக வாய்ப்பு இருக்கிறது என சொல்கிறார்கள் ஒரு தரப்பினர். இந்த சந்தேகம் எல்லாம் தீர அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க