'காற்றே காற்றே நீ' பாடகி, வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த வருடம் டும் டும் டும்!


பிரபல பாடகியும், வீணை இசைக்கலைஞருமான வைக்கம் விஜயலட்சுமிக்கு, கோழிக்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக்கலைஞருடன், டிசம்பர் மாதம் 13-ம் தேதி நிச்சயதார்த்தமும், அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது.

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்டு' படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட அந்த பாடலை, பிறகு தமிழிலும் வைக்கம் விஜயலட்சுமியை பாட வைத்தனர். தமிழில் 'காற்றே காற்றே' என்ற பாடல் பலருடைய காலர் டியூனாகவும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய குரல்வளம் மிக்க வைக்கம் விஜயலட்சுமி தற்போது விக்ரம் பிரபு நடித்து வெளியாகவுள்ள 'வீரசிவாஜி' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்வைக் குறைபாடுடையவரான விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், அசாத்திய பாட்டுத் திறனுக்காகவும் பலராலும் புகழப்படுபவர். 'செல்லுலாய்டு' படத்தின் மூலம் அறிமுகமாகி, பாகுபலி உட்பட 30 க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!