வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (07/12/2016)

கடைசி தொடர்பு:14:50 (07/12/2016)

அதிர்ச்சியில் பாடகி ஆஷா போஸ்லே!

பிரபல பிண்ணனி பாடகி, ஆஷா போஸ்லேவுக்கு புனேவில் உள்ள லோனாவாலா பகுதியில் ஒரு பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்கு இவர் எப்போதாவது வந்து போவது உண்டு. ஆனால், கடந்த சில மாதங்களாக அவருடைய பங்களாவின் மின்கட்டணம் அதிகமாக காண்பிக்கப்பட்டதை அடுத்து அதிர்ச்சிக்கு உள்ளான ஆஷா போஸ்லே, மும்பை நகர பா.ஜ கவின் தலைவர் ஆசிஷ் ஷெலார் மற்றும் மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலேயிடம் கொண்டு சென்றார். இதனை அடுத்து, ஆஷா போஸ்லே கொடுத்த குற்றச்சாட்டிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சந்திரசேகர் உத்தரவிட்டார்.

இந்த பங்களாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.16 ஆயிரத்து 411 ரூபாய் மின்கட்டணம் ஆனதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், முந்தைய மாதங்களில் ரூ. 37 ஆயிரத்து 168 ஐ பாக்கியாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க