இளையராஜாவுக்கும் ஜெயலலிதா இரங்கல் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை! | There is no connection between Ilayaraja and the song which is going viral..!

வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (08/12/2016)

கடைசி தொடர்பு:14:15 (08/12/2016)

இளையராஜாவுக்கும் ஜெயலலிதா இரங்கல் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை!

ஜெயலலிதாவின் மறைவுக்காக இளையராஜா எழுதி, பாடிய பாடல் என்று சமூக வலைதளங்களில் ஒரு பாடல் சுற்றி வருகிறது. ஆனால், இளையராஜா அப்படி ஒரு பாடலை பாடவே இல்லையாம். விஜய் சேதுபதி, ஷாம், ஆர்யா இணைந்து நடித்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சதீஸ் வர்சன் என்பவர் இசையமைத்து பாடிய பாடல் தான் இது. இந்த பாடல் வரிகளை எழுதியவர், கவிஞர் அஸ்மின். இவர் ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா இறந்த பிறகு அஸ்மினும் வர்ஷனும் இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். அதை இருவரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். சதீஸ் வர்சனின் குரல் கேட்பதற்கு இளையராஜாவின் குரலைப் போல் இருப்பதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க