வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (14/12/2016)

கடைசி தொடர்பு:14:54 (14/12/2016)

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பரத்..!

தமிழில் ‘கத்தி’, ஹிந்தியில் ‘அகிரா’ படங்களை முடித்து விட்டு மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, நடிகர் பரத் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதனை ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக பரத்தின் படங்கள் ஜொலிக்காத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க