‘விஐபி-2’ படப்பிடிப்பிற்கு க்ளாப் அடித்த ரஜினிகாந்த்..!(படங்கள்) | Rajinikanth wishes to VIP team..!

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (15/12/2016)

கடைசி தொடர்பு:15:03 (15/12/2016)

‘விஐபி-2’ படப்பிடிப்பிற்கு க்ளாப் அடித்த ரஜினிகாந்த்..!(படங்கள்)

முதன் முதலாக நாம் தான் ‘அட சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்’ என தலைப்பில் கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தோம். அதன்பின் நாம் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்று தயாரிப்பாளர் தாணுவும் இயக்குநர் சௌந்தர்யாவும் ஒப்புக்கொண்டனர். 

முதலில் இந்தப் படத்துக்கு ‘நிலவுக்கு என்னடி கோபம்’ என்று பெயர் சூட்டி இருந்தார்கள். அந்தப் படத்துக்கு சான் ரோல்டன் இசைமைக்கிறார் என்று சொல்லி இருந்தார்கள். அதன்பின் ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகம் எடுப்பதாக முடிவு செய்தனர். அந்த படத்துக்கு அனிருத், சான் ரோல்டன் என்று இரண்டு இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிட்டு இருந்தனர். 

ஏற்கெனவே ‘வி.ஐ.பி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்து இருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் பின்னணி இசை மட்டும் அனிருத் செய்ய இருக்கிறார். அனைத்து பாடல்களையும் சான் இசையமைக்கிறார். ‘வி.ஐ.பி-2’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி துவக்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர். அன்றைக்கு வர்தா புயல் வந்து சென்னையில் கோர தாண்டவம் ஆடியதால் பூஜை போடும் திட்டம் கைவிடப்பட்டது.

‘வி.ஐ.பி-2’ படத்திற்காக இயக்குநர் சௌந்தர்யாவுக்கு தனியாக ஓர் அலுவலகம் அமைத்து கொடுத்து இருக்கிறார் கலைப்புலி தாணு. அந்த அலுவலகத்தில் இன்று காலை ‘வி.ஐ.பி-2’ படத்தின் பூஜை சிறப்பாக போடப்பட்டது. படப்பூஜைக்கு சிறப்பு விருந்தினராக ரஜினியை அழைத்து இருந்தனர். ’வி.ஐ.பி-2’ படத்தில் தனுஷ் நடிக்கும் ஓர் காட்சியை பூஜையின் போது க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் ரஜினி. அந்தக் காட்சியை பூஜைக்கு வந்து இருந்தவர்கள் ரசித்து கை தட்டி மகிழ்ந்தனர்.

சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க