வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (22/12/2016)

கடைசி தொடர்பு:13:32 (22/12/2016)

2016 முடிவதற்குள் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள்..!

2017 பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழில் பல படங்கள் வரவிருக்கிறது. நாளை, விஷால் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’, சசிகுமார் நடித்துள்ள ‘பலே வெள்ளையத் தேவா’, எஸ்.வி.சேகரின் ‘மணல் கயிறு-2’ மற்றும் அமீர்கான் நடித்துள்ள ‘தங்கல்’ ஹிந்தி படத்தின் தமிழாக்கம் ‘யுத்தம்’ என நான்கு படங்கள் வரவிருக்கின்றன.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் - 30), பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள ‘போங்கு’, ரகுமான் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘துருவங்கள் பதினாறு’ மற்றும் ‘மோ’, விஜய் வசந்த், சமுத்திரகனி நடித்துள்ள ‘அச்சமின்றி’ என ஐந்து படங்கள் வரவிருக்கின்றன.

இந்த படங்களுடன் மேலும் ஒன்றிரண்டு படங்கள் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட ‘போகன்’, எப்போது ரிலீஸ் என அறிவிக்காமலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க