Published:Updated:

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

கவின் மலர்படங்கள் : என்.விவேக்

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

கவின் மலர்படங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

மச்சீர்க் கல்வி... பெரும் குழப்பம்!

 உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைக்கச் சொன்னால், கல்வி நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளைக் கல்வியாளர்கள் என்கிற பெயரில் உறுப்பினர்களாகப் போட்டு, ஒரு குழு அமைத்துக் குழப்படி பண்ணி இருக்கிறது தமிழக அரசு. மூன்று வாரங்கள் கழித்து இறுதித் தீர்ப்பு... அதுவரை பிள்ளைகள் பள்ளியில் என்னதான் செய்கிறார்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இந்த மூன்று வாரங்களுக்கு மட்டும் பாடத்திட்டம் அனுப்பி இருக்கிறது அரசு. செயல் வழிக் கற்றல் மூலம் பொதுவான பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவு. சில பள்ளிகளுக்குச் சென்று பார்த்தபோது, ஆசிரியர் கள் நாட்களை வீணாக்காமல் மாணவர்களுக்குப் பொதுவான பாடங்களை நடத்திக்கொண்டு இருந் தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில்பொது இலக்கணம், அடிப்படைக் கணக்கு, சமூக அறிவிய லில் வரைபடங்களை வைத்து பாடங்கள், அறிவிய லில் சில சின்னச் சின்னப் பரிசோதனைகள் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

10-ம் வகுப்பில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தபோது, 'ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடிக்கொண்டு இருந்தார்கள். மெழுகுவத்தியைக் கொளுத்தி, அந்தத் தீயில் ஒரு காகிதத்தைக் காட்டி அது கரிய நிறமாக மாறி எரிவதைக் காட்டிவிட்டு, கார்பன் உள்ள பொருட்கள் எல்லாம் எரியும்போது கரிய நிறத்தில் மாறும் என்கிற சின்ன பரிசோதனை யைச் செய்துகாட்டி, மெழுகுவத்தியை அணைத்த போதுதான் இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாட்டு. ஆசிரியை முகம்கொள்ளாச் சிரிப்போடு அதே பரிசோதனையை மாணவர்களையும் செய்யச் சொன்னார். ஆர்வத்தோடு வந்து ஒவ்வொருவராகச் செய்து பார்த்தார்கள். இப்படி சின்னச் சின்னதாக நிறையப் பரிசோதனைகள், விளையாட்டு கள் என்று நேரம் செல்கிறது.

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

''என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பாடத்திட்டத்தை மட்டும்தான் அரசு தந்தது. இந்த நூல், மெழுகுவத்தி வகையறாக்களை எல்லாம் நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்' என்றனர் ஆசிரியர்கள்.

மாணவர்களிடம், 'உங்களுக்கு சமச்சீர்க் கல்வி வேண்டுமா? வேண்டாமா?' என்று கேட்டபோது கோரஸாக 'சமச்சீர்க் கல்விதான் வேண்டும்' என்று பதில் வந்தது. காரணம்?

'அதுதான் ஈஸியா இருக்கும்!'  

'ஏழைங்க, பணக்காரங்க எல்லாரும் ஒரே மாதிரி படிப்போம் இல்லையா?'

'எங்க வீட்ல அதுதான் நல்லதுன்னு சொன்னாங்க.'

'எங்க சாரும் அதுதான் நல்ல சிலபஸ்னு சொன்னார்.'

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

'ஒண்ணாவது, ஆறாவது புத்தகம் எல்லாம் நல்லா இருக்கு... அது மாதிரிதான் எங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால், சமச்சீர்க் கல்விதான் வேணும்'

-இப்படி விதவிதமான பதில்கள் கிடைக் கின்றன. சரி, ஒருவேளை சமச்சீர்க் கல்வி கிடையாது என்ற நிலை வந்துவிட்டால், இந்தப் பிள்ளைகளின் கதி?

''நான் ஸ்கூலுக்கே வர மாட்டேன். பழைய சிலபஸ் கஷ்டம்' என்றாள் ஒரு மாணவி.

'அதெல்லாம் விட மாட்டோம். சமச்சீர்க் கல்விதான் வேணும்னு கேட்போம்' என்று ஒரு மாணவன் சொல்ல, 'டேய்! நீ கேக்குறதுக்குள்ள, முழுப் பரீட்சை வந்துடும்டா' என்றான் இன்னொருவன். 'வேற வழி இல்லை! படிச்சுத்தான் ஆகணும். பப்ளிக் எக்ஸாம் ஆச்சே?' என்கிறார்கள் சோகத்தோடு. கண்களில் பயமும் கலக்கமும் தெரிகிறது.

இந்த மூன்று வாரங்கள், பாடம் எதுவும் இல்லாமல் செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாணவர்களுக்கு மூன்று வாரங்களுக்குப் பின் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டி, வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கூடம்வைத்து தங்களைத் தாளிப்பார்களோ என்கிற பீதி நிலவுவது தெளிவாகவே தெரிகிறது. அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படுவது பிஞ்சுக் குழந்தைகளாக இருப்பதைப் பார்க்கப் பார்க்க, வேதனையும் கோபமுமே மிஞ்சுகிறது. இப்படி ஒரு பயத்தையும் பீதியையும் மாணவர்களிடையே உருவாக்கி, அவர்களது மன நிம்மதியைக் கெடுத்ததற்கு என்ன மன்னிப்பு கேட்கப்போகிறது தமிழக அரசு?

சில பெற்றோர்கள், எப்படியும் சமச்சீர்க் கல்வி வராது என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளுக் குப் பழைய பாடத்திட்டத்தின் பாட நூல்களை வாங்கிக் கொடுத்து இருக் கின்றனர். பிள்ளைகளை மெட்ரிக் பள்ளி யில் படிக்கவைக்கும் சில ஆசிரியர்களும் கூட, சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பதை ஆசிரியர்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

கறுப்பு மார்க்கர் பேனா, பிளேடு சகிதம் பள்ளிகளுக்கு வந்து பாடப் புத்தகத்தில் உள்ள சில பக்கங்களைக் கிழிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு, நிறைய ஆசிரியர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. ஆசிரியர்களை அவர்கள் பணிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு வேலையில் அரசு ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பாடம் கற்றுக்கொடுப்பதுதானே ஆசிரியர்களின் பணி? அ.தி.மு.க. அரசு விரும்பாததால் - குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா விரும்பாததால் - கிழிப்பதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய நேரத்தையும் உழைப்பை யும் வீண் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

இதற்கு இடையில், பழைய பாடத்திட்டத்தின் பாடங்களை அச்சடிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை எல்லாம் பார்க்கையில், சமச்சீர்க் கல்விக்கு முழுக்குப் போடும் வகையிலேயே காரியங்கள் நடக்கின்றனவோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்றவை, சமச்சீர்க் கல்விக் குழுவில் நியமிக்கப்பட்ட 'கல்வியாளர்கள்’ குறித்த தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கை தானார்கள். இப்படிப் பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள இந்த சமச்சீர்க் கல்விக் குழுதான் 'ஆராய்ந்து’ ஓர் அறிக்கையைத் தயாரித்துக் கொடுக்கப்போகிறது. அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி ஆகும்.

''சமச்சீர்க் கல்விதான் வேண்டும்!''

உண்மையான கல்வியாளர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதை அவர்களுடன் உரையாடியபோது உணர முடிந்தது. 'பள்ளி முதலாளிகள் எல்லாம் கல்வியாளர்கள் என்றால், இனி கல்வியாளர்கள் எல்லாம் தங்களைக் கல்வியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டும்' என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

பொதுவாக, ஒரு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்தான் குற்றவாளி யார் என்பதும் என்ன தண்டனை என்பதும் தெரிய வரும். ஆனால், இந்த சமச்சீர்க் கல்வி வழக்கு விசித்திரமானது. தீர்ப்புக்கு முன்னரே குற்றவாளியாக நிற்கிறது தமிழக அரசு.

ஆனால், தண்டனை மட்டும்... மாணவர்களுக்கு!