Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

 'அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது’ என்பது பழைய வதந்தி. 'இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது சிம்புதான்’ என்பது புது வதந்தி. இது தொடர்பாக சிம்புவை போனில் பிடித்து விசாரித்தாராம் நாகார்ஜுனா. இதாவது உண்மையா... இல்லை வதந்தியாப்பா?  

 இந்த வருடம் தேசிய விருது பெற்ற மலையாளப் படமான 'ஆதாமிண்டே மகன் அபு’ படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி இருக்கிறார் கரண் ஜோஹர். மிகவும் ஏழ்மையான முஸ்லிம் கணவன்-மனைவி, ஹஜ் பயணம் செல்ல எவ்வளவு போராடுகிறார்கள் என்பதுதான் கதை. இந்தியில் கரண் ஜோஹர் இயக்க, ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார். தமிழ் டைரக்டர்கள் இன்னாப்பா பண்றீங்க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

பந்து வீச்சாளர் ஜாகீர் கான் திருமணம் செய்ய இருக்கும் இஷா ஷெர்வானி, நம்ம கமல் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்’ படத்தில் நடிக்கிறார். கதக் டான்ஸரான இஷா, படத்தில் டான்ஸ் மாஸ்டராகவே வருகிறார். விஸ்வரூப நடனமோ?

 'ஐ.பி.எல். போட்டிகளுக்குப் போட்டியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தும் 'ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்’ போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட மாட்டார்கள்’ என்று அறிவித்துவிட்டது பி.சி.சி.ஐ. ''இந்திய வீரர்கள் வரவில்லை என்றால், இந்திய நடிகர்களை அழைத்து வந்து தொடக்க நிகழ்ச்சியை நடத்துவோம்'' எனச் சவால்விடுகிறது இலங்கை கிரிக்கெட் சங்கம்.  சல்மான் கான், ஸ்ரேயா, அசின் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றனவாம். ''இதற்குப் பின்னால் இருப்பது லலித் மோடிதான்'' எனக் கொதிக்கிறது பி.சி.சி.ஐ. போங்கு ஆட்டம் ஆடாதீங்க!

இன்பாக்ஸ்

'பொன்னியின் செல்வன்’, 'பகலவன்’ இரண்டும் டிராப். 'அடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம்தான்’ என கட் அண்ட் ரைட்டாக விஜய் தரப்பில் இருந்தே அறிவிப்பு வந்துவிட்டது. இந்தியில் அக்ஷய்குமாரை இயக்க இருந்த வாய்ப்பைத் தள்ளிவைத்துவிட்டு, விஜய்க்காக இந்தப் படத்தை இயக்குகிறாராம் முருகதாஸ். இதில் விஜய்க்கு ஜோடி... தீபிகா படுகோன். 'ராணா’வுக்கு முன்னாடியே ஒரு ரவுண்டா?

இன்பாக்ஸ்

 திருமணத்துக்கு முன்பு கடைசிப் படமாக தெலுங்கில் 'ஸ்ரீராமஜெயம்’ படத்தில் சீதையாக நடித்துக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா. நற்சான்றிதழோடு சினிமாவுக்கு டாட்டா காட்ட வேண்டும் என்று நினைக்கும் நயன்தாரா மிக ஈடுபாட்டோடு நடித்துவருகிறார். 'இதுவரை நயன்தாரா இப்படி நடித்துப் பார்த்ததே இல்லை’ என்று புகழ்கிறது யூனிட். இந்தச் 'சீதை’யை அவர்கிட்ட சேர்த்ததே 'வில்லு’தானே!

இன்பாக்ஸ்

 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ சார்பாக 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பார்கள். இந்த ஆண்டு, கூடுதலாக 'வாகை’ என்னும் தொண்டு நிறுவனத்துக்கும் 'தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி’க்கும் முறையே

இன்பாக்ஸ்

1.5 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார் சூர்யா. சூப்பர்யா!

இன்பாக்ஸ்

 கேத்ரீனா கைஃபின் பிறந்த நாள் பார்ட்டியில், ஓவர் மப்பில் ஷாரூக்கும் சல்மானும் மூன்று வருடங்களுக்கு முன் மோதியது வரலாறு. அதன் பிறகு,  பார்ட்டி வைப்பதையே நிறுத்திவிட்டார் கேத்ரீனா. ''இந்த ஆண்டு நண்பர்கள் பர்த்டே பார்ட்டி கேட்பதால், தவிர்க்க முடியவில்லை. பார்ட்டிக்கு ஷாரூக், சல்மான் இருவரையும் அழைத்து சமாதானம் செய்வேன்!'' என்று அறிவித்து இருக்கிறார் கேத்ரீனா. 'கைஃப்’புள்ள ஆயிடாதீங்க கான்ஸ்!

இன்பாக்ஸ்

 ஜாக்கி சானின் 100-வது படமான '1911’ படத்தில் அவரது மகன் ஜேஸி சானும் நடித்திருக்கிறார். பாடகர் மற்றும் டான்ஸரான ஜேஸி சான், இந்தப் படத்தில் டேப் டான்ஸும் ஆடி இருக்கிறார். ''இந்தியப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள்தான் படத்தில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுகிறார்கள்'' என்கிறார் ஜேஸி சான்! ஜப்பானில் 'வேட்டைக்காரன்’!

இன்பாக்ஸ்

 ட்விட்டரில் 'ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்!’ என்று அமிதாப் அறிவித்ததுதான் தாமதம். அரை மணி நேரத்தில் 2,843 வாழ்த்துகள் குவிந்தன. நவம்பர் மாதம் குழந்தை ரிலீஸாம். ஜூனியர் ஐஸ் கொடுங்கப்பா!