வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (01/01/2017)

கடைசி தொடர்பு:15:59 (01/01/2017)

படமாகிறது தங்கமகன் மாரியப்பன் வாழ்க்கை!

2016 ரியோ பாராலிம்பிக்ஸில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கை படமாகிறது. ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் படம் தயாராகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதற்காக ஐஸ்வர்யாவுக்கு பாலிவுட் பாஷா ஷாருக்கான் முதல் தனுஷ் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இன்று ஐஸ்வர்யா தனுஷின் பிறந்தநாள் என்பதால், அறிவிப்பை வெளியிட்டுள்ளார்களாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க