வெளியிடப்பட்ட நேரம்: 07:14 (02/01/2017)

கடைசி தொடர்பு:10:16 (02/01/2017)

சல்மானை வென்ற அமீர்கான்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்த படம் டங்கல். மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் அவரது மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக் கொடுத்து சர்வதேச கவனம் பெறச் செய்த நிஜகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது டங்கல்.  முதல் நாளிலேயே வசூலில் கலக்கிய படம், விமர்சன ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.

அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த படம் சுல்தான். படத்தில் சல்மானும் மல்யுத்தவீரராக நடித்திருப்பார். அதற்கு முந்தைய கலெக்‌ஷன்கள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி சுல்தான் படம் முதல் வாரத்திலேயே 180.36 கோடி வசூல் செய்தது. இப்போது சுல்தானையும் மிஞ்சும்படி டங்கல் 197.53 கோடி வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது வாரத்திலேயே 250 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தானின் மொத்த கலக்‌ஷன் 300 கோடி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க