வெளியிடப்பட்ட நேரம்: 02:04 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:22 (03/01/2017)

த்ரிஷாவின் முதல் மலையாளப் படம்!

த்ரிஷா நாயகியாக அறிமுகமாகி சென்ற ஆண்டு டிசம்பர் 13-ம் தேதியோடு 14 வருடங்கள் ஆகிறது, இப்போது தான் தன் முதல் மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷ்யாம் பிரசாத் இயக்கும் 'ஹேய் ஜுட்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நிவின் பாலி தான் ஹீரோ. காதல் கலந்த மாறுபட்ட கதையாக உருவாகவிருக்கிறது படம். 

தற்போது மாதேஷ் இயக்கும் மோகினி, அரவிந்த் சுவாமி ஜோடியாக 'சதுரங்க வேட்டை 2' படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இது தவிர 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கும் '96' படத்திலும் நடிக்கிறார். இதில் த்ரிஷா விஜய் சேதுபதிவுடன் இணைந்து நடிக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க