வெளியிடப்பட்ட நேரம்: 03:46 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:16 (03/01/2017)

தல 57 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வந்ததால் சின்ன ப்ரேக் விட்ட படக்குழு மீண்டும் படப்பிடிப்பை யூரோப்பில் தொடர இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்தப் படப்பிடிப்பு முடிந்த பின் சென்னைக்கு வருகிறது தல57 டீம். சில வாரங்களுக்கு முன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் முந்தைய வாரங்களில் வெளியாகி வைரலானது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், தம்பிராமையா, கருணாகரன் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க