துல்கர் சல்மானின் அடுத்த தமிழ் படம்! | Dulquer Salmaan's next Tamil film

வெளியிடப்பட்ட நேரம்: 02:56 (06/01/2017)

கடைசி தொடர்பு:02:55 (06/01/2017)

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ் படம்!

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மலையாளத்தில் பிஸியாகிவிட்ட துல்கர் சல்மான் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். இந்த முறை இவரை இயக்கப் போவது புதுமுக இயக்குநரான ரா.கார்த்திக். துல்கரின் தேதிகள் உறுதியானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.

ரொமான்ஸ் கலந்த ரோட் மூவியாக உருவாக இருக்கும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. எனை நோக்கிப் பாயும் தோட்டா மேகா ஆகாஷ், ஒரு நாள் கூத்து நிவேதா பெத்துராஜும் இந்த லிஸ்டில் இருக்கிறார்களாம். 'ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வரும்' என்கிறார் இயக்குநர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க