வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (13/01/2017)

கடைசி தொடர்பு:10:31 (13/01/2017)

பொங்கல் பண்டிகைக்கு 5 காட்சிகள் நடத்திக்கொள்ள திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள   திரை அரங்குகளில் இதுவரை  4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனால்  பண்டிகை காலங்களில்  வெளியாகும் படங்களுக்கு டிக்கெட்  கிடைப்பது குதிரைக்கொம்பாக  இருக்கும். இந்தக்  காட்சி  நேரத்தை அதிகபடுத்தித் தருமாறு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில்  வேண்டுகோள்  விடுக்கப்பட்டது. தற்போது  இதுகுறித்து  அந்த  சங்கம்  வெளியிட்டுள்ள  அறிக்கையில், இந்தப் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு வருகிற 13,17,18,19 ஆகிய  தேதிகளில் அதிகப்படியாக  ஒரு காட்சி, (அதாவது 5 காட்சிகள்) நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.

மேலும் பொங்கல் விடுமுறை நாட்களான 14,15,16 ஆகிய  தேதிகளில் ஏற்கெனவே உள்ள  அரசாணையின்படி, காலை  9 மணிக்கு  கூடுதலாக  ஒரு காட்சியை  நடத்திக்கொள்ளலாம்  என்று அறிவித்துள்ளது. அதிகப்படியான காட்சிகள்  திரையிடுவது  குறித்து திரையரங்கு  உரிமையாளர்கள் மாவட்ட  ஆட்சித் தலைவரிடமும், கேளிக்கை  வரி  அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டு நடத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பிரம்மா 

நீங்க எப்படி பீல் பண்றீங்க