Published:Updated:

புதையல் பூதம்!

எஸ்.ஷக்திபடங்கள் : ரா.ராம்குமார்

புதையல் பூதம்!

எஸ்.ஷக்திபடங்கள் : ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

'இந்தியாவின் காஸ்ட்லி கடவுள்!’ என்ற பட்டத்தை, திருப்பதி வெங்கடாஜலபதியிடம் இருந்து 'ஜஸ்ட் லைக் தட்’ தட்டிப் பறித்துவிட்டார் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி! பத்மநாபபுரக் கோயிலின் பாதாள அறைகளில் இருந்து வெளி வந்துகொண்டே இருக்கும் புதையலின் மதிப்பு, மில்லியன், பில்லியன் தாண்டி ட்ரில்லியன் களில் எகிறிக்கொண்டு இருக்கிறது.

 ஏதோ ஒரு 'பூதம்’ வரும் என்று எதிர்பார்த்துதான் கோயிலின் பாதாள அறைகளைத் திறந்தார்கள், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஆய்வு கமிட்டியினர். ஆனால், இவ்வளவு பெரிய புதையல் பூதத்தை எதிர்பார்க்கவே இல்லை. இந்த பூத விளக்கைத் தேய்த்தவர் வழக்கறிஞர் டி.பி.சுந்தர்ராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதையல் பூதம்!

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலின் பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார் இவர். மனுவைப் பல கட்டங்களாகப் பரிசீலித்த நீதிமன்றம், ஏழு உறுப்பினர்கள்கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் மேற்பார்வையில் அந்த அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. குடம் நிறையத் தங்க நாணயங்களும், செப்புக் காசுகளும் இருக்கும் என்று அந்தக் குழுவினர் நினைத்தார்கள்தான். ஆனால், 18 அடி நீள 10 கிலோ தங்க நெக்லஸ் உள்பட பல்லாயிரக்கணக்கான ஆபரணங்கள், குடம் குடமாக நிரம்பி வழியும் தங்க நாணயங்கள், வைரம் பதிக்கப்பட்ட கிரீடங்கள் என்று கோடிக் கோடியான மதிப்பில் குவிந்திருந்த நகைகளைப் பார்த்து மிரண்டு போனது ஆய்வுக் குழு.

'மெக்கன்னஸ் கோல்டு’ வகையறா ஹாலிவுட் படங்களின் சுவாரஸ்யத்துக்குச் சற்றும் குறைவில்லாத த்ரில், திகிலுடன் நடைபெற்று வருகிறது ஆய்வுப் பணி. பாதாள அறைகளில் ஆக்சிஜன் வாயுவைப் பாய்ச்சிவிட்டு விஷ ஜந்துக்களை அழிக்கும் வாயுவைக் கக்கும் ஹை ஸ்பீடு ஆட்டோமேடிக் மெஷின்களைச் சுமந்துகொண்டு மீட்பு அணியினர் முதலில் உள்ளே சென்று நிலைமையை சகஜமாக்கி சிக்னல் கொடுத்த பிறகுதான், மற்றவர்கள் உள்ளே எட்டியே பார்க்க முடிகிறது!

புதையல் பூதம்!

பத்மநாப சாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து தங்க வெள்ளம் பொங்கப் பொங்க, கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு கோபம் குமுறிக் கொட்டுகிறது. ஆதி காலத்தில் கோயிலும் அதன் சொத்துக்களும் 'எட்டு வீட்டில் பிள்ளைமார்’ என்கிற எட்டு நாயர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றன. திருவிதாங்கூர் அரச பரம்பரை யின்

புதையல் பூதம்!

மூத்த மன்னர்களில் ஒருவரான மார்த்தாண்ட வர்மாதான், அதை மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். பத்மநாப சாமி கோயில் மிகப் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். அதன் பிறகு, 1750-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் தனது அத்தனை சொத்துக்களையும் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒப்படைத்துவிட்டு, 'இனி நாங்கள் உங்கள் சேவகர்கள்’ என்று அறிவித்தார். கடவுள் பத்மநாபனின் சேவகனாக இருந்துதான் ஆட்சியும் செய்து வந்திருக்கிறார். தினமும் கோயிலுக்குச் சென்று அதன் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணிப்பார்களாம். ஒருநாள் கோயிலுக்குச் செல்லவில்லை என்றாலும், தங்களுக்குத் தாங்களே அபராதமும் விதித்துக்கொள்வார்களாம். கோயிலைவிட்டு வெளியே வரும் போது, கால்களை நன்றாக உதறி விட்டே வெளியேறுவார்களாம். இதனால் கோயிலுக்குள் இருக் கும் மண்ணைக்கூட தாங்கள் எடுத்துச் செல்லவில்லை என்று பிறருக்கு உணர்த்தவே இந்த நடைமுறையாம்.

சுதந்திரத்துக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த 'மஹாராஜா ஸ்ரீ சித்திரத் திருநாள்’ முழுக்கவே தங்கத்தினால் வேயப்பட்ட மண்டபம் ஒன்றை அனந்த பத்மநாபனுக்காக அமைக்கும் முனைப் பில் இருந்திருக்கிறார்.  ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட, அந்தப் பொறுப்பு ஸ்ரீ உத்திராடம் திருநாள்

புதையல் பூதம்!

மார்த்தாண்ட வர்மா வின் கைகளுக்கு வந்திருக்கிறது. அவர் அதற்காக கோயிலின் பாதாள அறைகளில் வழக்கமாகத் திறக்கப்படும் இரண்டு அறை களில் இருந்து தங்கத்தை எடுத்த தாகவும், உருக்கப்பட்ட தங்கம் அதன் பிறகு காணாமல் போன தாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், இவை எவற்றுக்கும் சரியான ஆதாரங்கள் இல்லை.

இதன் பிறகு, 2007-ம் ஆண்டில் அந்த இரண்டு அறைகளில் இருந்த தங்கம் உள்ளிட்ட விலை மதிப்பு இல்லாப் பொருட்களைக் கணக்கிட்டு, போட்டோ எடுத்து ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது கோயில் நிர்வாகம். ஆனால், இதற்கு பக்தர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த முயற்சி அத்துடன் முடிவுக்கு வந்தது.

அந்த சமயம்தான் கோயில் சொத்துக்களின் உரிமை பற்றிய விவாதம் துவங்கியது. மன்னர் குடும்பத்துக்குக் கோயில் சொத்துக்களின் மீது எந்த அதிகாரமும் கிடையாது என்று ஒரு தரப்பினர் சட்ட நுணுக்கங்களுடன் புட்டுப் புட்டுவைக்க, மன்னரின் விசுவாசிகளோ அதைக் கடுமையாக மறுத்தனர். இந்த நிலையில், கோயில் மீதான தனது உரிமையை உறுதிப்படுத்தக் கோரி, உத்திராடம் திருநாள் மன்னர் கோர்ட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு தோல்வியே மிஞ்சியது. அதன் பிறகு ஹரிக்குமார் என்பவரை, கோயிலின் புதிய செயல் அலுவலராக நியமித்தது மற்றொரு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில்தான், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சுந்தர்ராஜன். இந்த மனுவின் விளைவாகத்தான், இந்த புதையல் பூதம்!

கோயிலில் மொத்தம் ஆறு ரகசிய அறைகள் இருக்கின்றன. இதில் இரண்டு தினமும் திறக்கப்படுவது வழக்கம். மேலும் இரண்டு அறைகள், வருடத்துக்கு இரண்டு முறை கள் திறக்கப்படும். மீதம் இருக்கும் இரண்டு அறைகள்தான் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை என்கிறார்கள். தற்போது நிர்வாக வசதிக்காக ஏ, பி, சி, டி, இ, எஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆறு அறைகளிலுமே தங்கம் இருக்கிறது என்கிறார்கள். அதிலும், பல வருடங்களாகத் திறக்கப்படாத பாதாள அறை ஒன்றில் இருந்து மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பைத் தொடும் புதையல் இருக்கிறது. அதிக அளவு ஆபரணங்கள் இருந்த பாதாள அறைகள் கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இருந்ததோடு, மிக மிக உறுதியான மரக் கதவுகளுடன் இருந்தன. நாணயங்கள் பட்டுத் துணிகளால் மூடப்பட்டு, வைர ஆரங்கள் இருக்கும் பெட்டிகள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்தனவாம். மன்னர் பரம்பரையினர் இந்த செல்வங்களைக் கோயிலின் பாதாளஅறை களில் வைக்கக் காரணமே, திப்புசுல்தான் மீது இருந்த பயமாம். வட கேரளப் பகுதி களில் அடிக்கடி தாக்குதல் நடத்திப் பொக்கிஷங்களை திப்புசுல்தான் கைப்பற்றிக்கொண்டு இருந்த சமயம், அவரிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டே பாதாள அறைகளில் செல்வங்களைப் பதுக்கினராம்.  

ஒரே நாளில் கோயிலின் சொத்துக்கள் உலகத்தின் கவனத்தையே திருவனந்தபுரம் பக்கம் திருப்பியிருக்கிறது. கூகுள் எர்த்-ல் கடந்த சில நாட்களில் அதிகம் நோட்டம் விடப்பட்ட ஸ்பாட்... இந்தக் கோயில்தான் என்கிறது இணையத் தகவல் ஒன்று.

கோயிலின் பாதாள அறைகள் திறக்கப்படுவது ஆண்டவன் மற்றும் அரச கட்டளையை மீறும் செயல் என்று ஒரு தரப்பினர் அழுத்தமாகக் குரல் கொடுக்கிறார்கள். கூடவே, கோயிலின் வரைபடங்கள், பாதாள அறைகள் இருக்கும் திசை போன்றவை மீடியாக்களில் வெளியாவது புதையலுக்கு ஆபத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். இத்தனை பரபரப்புக்கும் காரணமான சுந்தர்ராஜனைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் மோசமான வார்த்தைகளில் திட்டிக் குவிக்கிறார்கள் ஆன்மிக பக்தர்கள்.  

புதையலின் மதிப்பு என்று இப்போது சொல்லப்படுவது, தங்கம் மற்றும் வைரத்தின் இன்றைய சந்தை மதிப்பை வைத்துதான். தொல்பொருள் துறையினர் மற்றும் பொக்கிஷ மதிப்பீட்டாளர்களால்தான்  இதன் உண்மையான மதிப்பை அறிய முடியும். அந்த சமயம் இப்போதைய மதிப்பைக் காட்டிலும் 10 மடங்குகூட புதையலின் மதிப்பு எகிறலாம்!   மஹாராஜா ஸ்ரீ சித்திரத் திருநாள் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியபோது, ''தெய்வ சேவையோடு சேர்த்து அந்தப் புதையலையும் பூதம்போல் காத்து வந்தோம். ஆனால், இன்று எல்லாம் கை மீறிப் போய்விட்டது. ஆலயத்தினுள் தெய்வ நிந்தனை சகஜமாகிவிட்டது. எங்களின் நேர்மையைக்கூடச் சந்தேகப்படுவது கொடுமை. அனந்த சயனத்தில் இருக்கும் பத்மநாபன் உடனே கண் விழித்து, இதை எல்லாம் தண்டிக்க வேண்டும்!'' என்று குமுறுகிறார்கள். கோயில் மீதான மன்னர் குடும்ப உரிமை அடியோடு அறுக்கப்படும் நிலை குறித்துப் பேச அவர்களுக்கு மனம் இல்லை.

கண்டெடுக்கப்பட்ட செல்வங்கள் கோயிலின் சொத்துப் பட்டியலில் சேர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் என்பதுதான் இப்போதைய நிலை. ஆனால், ''நகைகளும்

புதையல் பூதம்!

பொற்காசுகளும் வானத்தில் இருந்து விழுந்துவிடவில்லை. மன்னருக்கு மக்கள் கட்டிய வரிப் பணத்திலும் ஆலயத்துக்கு மக்கள் அள்ளிக் கொடுத்த நன்கொடையில் இருந்தும்தான் இந்த நகைகள் உருவாகின. எனவே, மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கேரளத்தின் கடற்புற மற்றும் பழங்குடி மக்களின் ஏழ்மை வாழ்க்கை நிலையை அடியோடு மாற்ற இந்தப் பணத்தின் பெரும் பகுதியைப் பயன்படுத்த வேண்டும். அரசு இதற்குச் செவி சாய்க்காவிட்டால், அதை வலியுறுத்தும் வீரிய காரியங்களில் இறங்குவோம்'' என்று காசர்கோடு பகுதியில் இருந்து, கேரள தலைமைச் செயலகத்துக்குக் கொத்தான கடிதங்கள் வந்திருக்கின்றன. அடித்தட்டு மீனவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றப் போராடும் மாவோயிஸக் கூட்டத்தின் கோரிக்கைதான் இது என்கிறது கேரள உளவுப் பிரிவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism