வெளியிடப்பட்ட நேரம்: 23:55 (05/02/2017)

கடைசி தொடர்பு:00:04 (06/02/2017)

காதலர் தினத்தன்று ரஹ்மானின் கிப்ட் - ’காற்று வெளியிடை’ படத்தின் சிங்கிள்..!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதீ ராவ், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியன்று ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் 'அழகியே' பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியாகி இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் 'வான் வருவான்' சிங்கிள், காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இப்பாடல் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

காற்று வெளியிடை - வான் வருவான்

மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'ஓகே கண்மணி' போன்ற காதல் திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெறும் என்பது டீசர் பார்த்த ரசிகர்களின் கருத்து. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்தி, இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணி என்றாலே ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில், காதலர் தினத்தன்று இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே 'டன்' கணக்கில் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க