வெளியிடப்பட்ட நேரம்: 06:56 (06/02/2017)

கடைசி தொடர்பு:06:56 (06/02/2017)

குள்ளமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக் கான்!

பாலிவுட் ரசிகர்களால் 'கிங் கான்' என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான். 'தனு வெட்ஸ் மனு', 'ராஞ்சனா' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய், ஷாருக் கானின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முதன்முறையாக ஷாருக் கான் குள்ளமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஷாருக் கான்

கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் இந்திப்பதிப்பான 'அப்பு ராஜா' படத்தில் வரும் கதாபாத்திரம் போன்றதா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஷாருக், 'இது 'அப்பு ராஜா' படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. ரசிகர்கள் எங்கள் முயற்சியை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க