வெளியிடப்பட்ட நேரம்: 01:13 (11/02/2017)

கடைசி தொடர்பு:01:07 (11/02/2017)

தொடங்கியது 'சியான்54' படப்பிடிப்பு!

நடிகர் விக்ரம்

'சியான்54' என பெயரிடப்பட்டுள்ள, விஜய் சந்தர் இயக்கும் இரண்டாவது படத்தின் முதல் நாள் சூட்டிங் நேற்று தொடங்கியுள்ளதாக இப்படத்தின் நாயகன் நடிகர் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை வடசென்னை பகுதியில் நடப்பது போலவும், நடிகர் விக்ரம் லோக்கல் கேங்ஸ்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், தமன்னா நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

நடிகர் விக்ரம் தற்போது 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்திலும், 'சியான்54' படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க