வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (15/02/2017)

கடைசி தொடர்பு:14:15 (15/02/2017)

சிங்கம் 3 வெற்றி! ஹரிக்கு சூர்யா கொடுத்த பரிசு..!

Suriya and Hari

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-3 திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி பம்பர் ஹிட் அடித்துள்ளது. வெகு நாட்களாக சிங்கம்-3 ரிலீஸ் தேதி தள்ளிபோனாலும், ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும், 6 நாட்களிலேயே சிங்கம்-3 திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது என தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. தனது படம் வெற்றி அடைந்ததால் பெரு மகிழ்ச்சி அடைந்த சூர்யா இயக்குநர் ஹரிக்கு 'டொயோட்டா ஃபார்ச்யூனர்' காரை பரிசாக கொடுத்துள்ளார். 'சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...'

நீங்க எப்படி பீல் பண்றீங்க