வெளியிடப்பட்ட நேரம்: 00:53 (16/02/2017)

கடைசி தொடர்பு:01:56 (16/02/2017)

வைரலாகும் த்ரிஷா படத்தின் போஸ்டர்!


முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் ஜோடி சேர்ந்த '96' (தொண்ணூற்று ஆறு) படத்தின் போஸ்டர் சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறிய த்ரிஷா,'இது ஆன்மாபூர்வமான காதல் கதை  என்றும், இது தன்னுடைய 59-வது படம்' என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் தலைப்பைப் போலவே, போஸ்டரும் சமூக வலைதளங்களில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படத்தை சி.பிரேம் குமார் இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. செம த்ரிஷ் !

நீங்க எப்படி பீல் பண்றீங்க