தமிழ் ராக்கர்ஸால் ஒரு படத்துக்கு நடந்த சோகம்! | Lightman movie leaked in Tamil rockers before official release

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (16/02/2017)

கடைசி தொடர்பு:09:51 (17/02/2017)

தமிழ் ராக்கர்ஸால் ஒரு படத்துக்கு நடந்த சோகம்!

லைட்மேன்களின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்ட படம் லைட்மேன். இந்தப்படம் கடந்த 10-ம் தேதி ரீலிஸ் ஆவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன் இந்தப் படத்தை கடந்த 9-ம் தேதியே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் லீக் செய்து விட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் நாகராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஒரு குழுவாக எங்களது உழைப்பு, நேரம், பணம் ஆகியவற்றை இந்தப் படத்துக்காக முதலீடு செய்துள்ளோம். இதுபோன்றவர்களின் செயலால் எங்களது கனவு புதைக்கப்பட்டுள்ளது. இப்படி படத்தின் ரிலீசுக்கு முன்பே, அதை லீக் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இதனால் எங்களது படம் குறித்த விமர்சனத்தை ஊடகங்கள் வெளியிடவில்லை. 

Lightman

நான் கதாநாயகாக நடித்துள்ள முதல் படம் இது. 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து, முதன்முதலாக படத்தில் நடித்துள்ளேன். இதனால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நாங்கள் உதவிகள் இன்றி கைவிடப்பட்டு தனியாக இருக்கிறோம். இதுபோன்றவர்களின் செயல்களை எதிர்காலத்தில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என வேதனை தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதிவை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close