தன்னம்பிக்கை இளவரசன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDPrinceSivaKarthikeyan

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, தன் கல்லூரி மேடைகளில்  மிமிக்ரி செய்யக் கிடைத்த வாய்ப்பால் மேடையேறி,பொறுப்பான பையனாக இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்து, இன்று தமிழ்சினிமாவில் ஒரு என்டெர்டெயின்மென்ட் இளவரசனாகக் கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

  எந்தவொரு பின்புலமும் இல்லாமல் 'மெரினா' திரைப்படத்தில் துவங்கிய இவரது நடிப்புப் பயணம், 'ரெமோ'வரை அனைத்துவிதமான ரசிகர்களையும் சிரிக்கவைத்து,சந்தோஷப்படுத்தி கட்டிப்போட்டிருக்கிறது என்றால் மிகையல்ல. இப்படி, தமிழக இல்லங்களில் தத்துஎடுத்துக்கொள்ளப்படாத தலைப்பையனாக வாழ்ந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த் டே டூ யூ சிவா..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!