"என் பெயரில் நிறைய போலி முகநூல் பக்கங்கள்" - கவிஞர் தாமரை விளக்கம்! #poetthamarai

கவிஞர் தாமரை, தன் பெயரில் நிறைய போலி முகநூல் பக்கங்கள் இருப்பதாகவும், அவர் பெயரை மாசுபடுத்த சிலர் முயல்வதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பக்கங்களுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

"கடந்த சில ஆண்டுகளாக, நான் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் எவற்றிலும் பங்கேற்பதில்லை. அரசியல் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவதில்லை. திரைப்படவேலைகள் சார்ந்தவை தவிர்த்து வேறெந்தப் பொதுநிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியிருக்க அண்மைக் காலங்களில் நான் கூறாத கருத்துகளை நான் கூறுவதாகவும் நான் செய்யாத விமர்சனங்களைச் செய்வதாகவும் வெளிவரும் செய்திகள், படங்கள் அதிகமாயிருக்கின்றன. என் பெயரை மாசுபடுத்துவதற்கு யாரோ சிலர் முயல்வது நன்றாகவே தெரிகிறது.  இந்தச் செய்தி வெளியிட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து 'தவறான தகவல்' என்பதை ஒப்புக் கொண்டு விலகிக்கொள்ள வேண்டும். என் பெயரில் மேலும் பல முகநூல் பக்கங்கள் இயங்கி வருகின்றன. பத்துக்கும் மேல் இயங்கி வந்த அவற்றில் ஆறு அல்லது ஏழு பக்கங்களை முகநூல் தலைமையகத்தில் முறையிட்டு முடக்கிவிட்டேன். இன்னும் சில இயங்கி வருகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு 60,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களும் இருக்கிறார்கள்.. அவற்றிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளேன். நான் என்று நினைத்து பலரும் அங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து அவற்றை நம்ப வேண்டாம். இந்தப் பக்கத்தில் நான் வெளியிடுபவை மட்டுமே என் கருத்துகள். எமக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. நான் டுவிட்டரிலும் இல்லை." என நம்மிடம் தெரிவித்தவர், அவரது பர்சனல் முகநூல் பக்கத்திலும் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!