வெளியிடப்பட்ட நேரம்: 23:31 (19/02/2017)

கடைசி தொடர்பு:08:51 (20/02/2017)

வெளியானது, அல்லு அர்ஜுனின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்!

DJ

'சரைனோடு' படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், 'துவ்வாடா ஜெகந்நாதம்'. பவன் கல்யாண் நடிப்பில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'கப்பர் சிங்' படத்தை இயக்கிய ஹரீஷ் ஷங்கர் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார், அல்லு அர்ஜுன். இதில், ஹீரோயினாக 'முகமூடி' பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

படத்தில் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார், அல்லு அர்ஜுன். இரண்டு தினங்கள் முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த அல்லு அர்ஜுனின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வைரலாகி, பல பிரபலங்களால் ரீட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர், பிப்ரவரி 25-ம் தேதி வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க