வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (20/02/2017)

கடைசி தொடர்பு:11:04 (20/02/2017)

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: மலையாள நடிகர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!

 

Malayalam Film industry protest

சில நாட்களுக்கு முன்பு, மலையாள நடிகை பாவனாவுக்கு, அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து, ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மலையாள நடிகர்கள் கேரளத் தலைநகர் திருவணந்தபுரம் ஒன்றுகூடிப் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தப் போராட்டத்தில், முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, திலீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை, பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் இருவரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க