'அணு மின் நிலையம் அமைப் பதைத் தடுக்க கூடங்குளத்தில் உண்ணாவிரதம்!’

- நாளிதழ்களில் செய்தி வெளியானதும், கூடங்குளத்தில் இருந்தோம். அணு சக்தியின் குரூர முகத்தை அம்பலப்படுத்த தொடர்ந்து போராடி வரும் மருத்துவர் புகழேந்தி, சுப.உதயகுமாரன், 'பூவுலகு’ அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன், புவனேஷ்வர் உள்பட முக்கியமான பலர் கலந்துகொண்ட போராட்டம்!

காலை 6 மணிக்கே கூடங்குளத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எந்தக் கடைகளும் திறக்கவில்லை. கொஞ்சம் கொஞ்ச மாக மக்கள் மேல பஜார் சாலைச் சந்திப்பில் கூட ஆரம்பித்தனர். அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள்,அணு உலை கட்டப்படும்போது இறந்தவர்களின் உறவினர்கள், அணு மின் நிலையம் கட்டுவதற்காக அரசு கட்டவிழ்த்துவிட்ட நில அபகரிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், கதிரியக்க நீர்ப் போக்கு ஏற்படலாம் என்பதால் மீன் பிடித் தொழில் பாதிக்கப்படும் என அஞ்சும் மீனவர்கள், கொத்தடிமை கள்போல வேலை செய்யும் இளைஞர் கள், பெண்கள் தவிர, 'வன்முறை’ ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை யாக போலீஸார் என கூட்டம்.

கூடங்குளத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு இயக்கச் செயல்பாட்டாளர்களுடன் தொடங்கியது கார் பயணம்.

பயணத்தின் ஊடே செயல்பாட்டாளர் கள் கூடங்குளம்பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். கூடங் குளம் அணு மின் நிலையத்தில் கட்டுமான வேலைகளைச் செய்வதற்காக வட இந்தியாவில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இங்கே சேர்த்துவிட, சுமார் 23-க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்களாம். 'நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் தருகிறேன், 200 ரூபாய் தருகிறேன்’ என்று கூட்டிக்கொண்டு வருவார்களாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படுவதோ வெறும் 60 ரூபாய்தானாம். அணு மின் நிலையத்தார் ஒப்பந்தப் பணத்தை வழங்கினாலும், ஒப்பந்ததாரர்களே அதில் பாதியை அபகரித்துக்கொள்கிறார்கள். 60 ரூபாய் பெற்றுக்கொண்டு தகர சீட்களால் ஆன கூரையுடன் கூடிய அறைகள், மூன்று வேளை உணவு ஆகியவற்றைக் கொடுத்துவிடுவதால், பேசவோ, எதிர்க்கவோ முடியாமல் இருக்கிறார்கள் அந்தப் பணியாளர்கள்.

பொதுவாக, அணு மின் நிலையங்களில் உள்ள உலைகளைக் குளிரவைக்க கடலில் இருந்து நீரை எடுத்து 'கூலன்ட்’ ஆகப் பயன்படுத்தப்பட்டு, அதே நீர் மீண்டும் கடலிலேயே விடப்படும். இதனால், கடல் வெப்பம் அதிகமாகி கடல் சார் சூழல் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால், கூடங் குளத்திலோ குளிரவைக்கப் பயன்படுத்தப் படும் அந்த நீர், மீண்டும் எங்கு செலுத்தப் பட இருக்கிறது என்பது இன்று வரை மர்ம மாக இருக்கிறது. 'பம்ப் ஹவுஸ்’ எனப்படும் இடம்தான் கடலில் இருந்து நீரை எடுத்து உலைகளைக் குளிரவைத்து, பின்பு மீண்டும் கடலிலேயே அந்த நீரைவிடப் பயன்படும். கூடங்குளத்தில் இந்த 'பம்ப் ஹவுஸ்’ எப்படி வடிவமைக்கப்பட்டு செயல்படுகிறது என்பது வெளிஉலகம் அறியாத மர்மமாக இருக்கிறது.

கூடங்குளத்தின் இடிந்த கரையில் ஒரு விஸ்வாமித்திரர் கோயில் இருக்கிறது. முன்னர் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயக்குநராக இருந்த எஸ்.கே.அகர்வால், புற்றுநோயால் இறந்தார். கூடங்குளம் அணு உலைகளை வடிவமைத்த ரஷ்ய விஞ்ஞானிகள் சமீபத்தில் விமான விபத்தில் இறந்தனர். இப்போது நிலைய இயக்குநராக இருக்கும் காசிநாத் பாலாஜி ஒரு கார் விபத்தில் மனைவியை இழந்து, பலத்த காயங்களுடன் தப்பினார். இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் பின்னணியில் விஸ்வாமித்திரர் இருப்பதாக நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள். ''எங்கள் ஊர் விஸ்வாமித்திரரால் பாதுகாக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தக் கூடங்குளம் திட்டம் நிறைவேறாது!'' என்கிறார்கள் அவர்கள்.

ஊரில் கிறிஸ்துவ நாடார், இந்து நாடார், தலித் மக்கள் எனப் பல சமூக மக்கள். ஒவ்வொரு அணியாகப் பிரிந்து இருந்தாலும் கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்பதில் எல்லோரும் ஒரே உணர்வில் இருக்கிறார்கள்.

இறுதியாக புனித அன்னம்மாள் மேல் நிலைப் பள்ளியை வந்து அடைந்தோம். 1988-ம் ஆண்டு திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்தில் அரசாணை ஒன்று (எண்: 789) பிறப்பிக்கப்பட்டது. அதில் அணுமின் நிலையத்தில் இருந்து 1.6 கிலோ மீட்டருக்குள் எந்த விதமான தொழிற்சாலைகளோ, கட்டடங்களோ ஏற்படுத்தக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அணுமின் நிலையத்தில் காற்றாலைகள் வந்தது எப்படி? இந்தப் பள்ளி மே 28, 1993-ல், அணு சக்தித் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி இடிக்கப்பட்டது. 5 கி.மீ. சுற்றளவில் எந்தப் புதிய கட்டடங்களும் கட்டக் கூடாது என்கிற விதியைச் சொல்லி இடித்து இருக்கிறார்கள். ஆனால், மீண்டும் அதே பள்ளியைச் சமீபத்தில் 'மக்களுக்கு நல்லது செய்கிறோம்’ என்று சொல்லி அணு சக்தித் துறையினரே கட்டி இருக்கிறார்கள். இந்த முரண்பாடான நடவடிக்கைகள் எதற்காக?

அணு மின் நிலையத்துக்குப் பாது காப்பாக இருக்கும் 'மத்திய பாதுகாப்புப் படை’ (சி.எஸ்.எஃப்.) உள்ளே, வெளியே செல்லும் மக்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு, எதை வேண்டுமானாலும் உள்ளே கொண்டுசெல்லவும், வெளியே எடுத்து வரவும் அனுமதிக்கிறார்களாம். இப்படியான பிரச்னை ஒன்றில் மாட்டிக்கொண்ட ஒரு சி.எஸ்.எஃப். அலுவலர் சமீபத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டு இருக்கிறார். எங்கே இருக்கிறது பாதுகாப்பு?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான பால கணேஷ், முக்கியமான சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

''டம்மி எரிபொருள் சோதனை, பைப் லைன் சோதனை என இந்த அணு மின் நிலையத்தில் நடந்த சோதனைகள் தோல்வி அடைந்து இருக்கின்றன. கூடங்குளத்தில் கேபிள் லே-அவுட் பிரச்னை இருக்கிறது என்று அணு சக்தி கமிஷன் சேர்மன் ஸ்ரீகுமார் பானர்ஜி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

ஜனவரி 31, 2007 அன்று இந்தத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக அணு சக்தித் துறையினரால் வழங்கப்பட்டு 'தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்’ முதலாவதாக ஒரு நோட்டீஸை அச்சடித்தது. அதில் 'ஆலை அமைந்துள்ள இடம்/இடப்பெயர்ச்சியாக வேண்டிய செயல்கள், இந்தத் திட்டத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிற உண்மையான குடிமக்கள்’ ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு, மார்ச் 31, 2007 அன்று மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று சொல்லி இரண்டாவதாக ஒரு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால், இரண்டாவதாக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் 'இடப்பெயர்ச்சி, பாதிக்கப்படுகிற’ போன்ற வார்த்தைகள் இல்லை. உண்மையிலேயே இந்தத் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றால், அணு சக்தித் துறை எதற்காக இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்?''

கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில் சொல்லத்தான் யாரும் இல்லை!

'ஹாட் ரன்' ரகசியம்!

இங்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட அதே தினத்தில், 'ஹாட் ரன்’ எனும் டம்மி எரிபொருட்களைக்கொண்டு பரிசோதனை நடத்தி இருக்கிறார் கள், கூடங்குளம் அணு மின் நிலையத்தினர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவ்க்கு இத் தருணத்தில் ஓர் அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கிறது. 'ரஷ்யாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் விரைவில் மூடினால்தான் பாதுகாப்பு’ என்பது அறிக்கையின் உள்ளடக்கம். குறிப்பாக, லெனின்கிராட் அணு மின் நிலையம் மற்றும் கோலா அணு மின் நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இயற்கை வள அமைச்சகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், அணு மின் தொடர்பான சேவை அமைப்பு மற்றும் ரஷ்யாவின் அணு மின் கழகமான ரொசடோம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து அளித்ததுதான் இந்த அறிக்கை. இதில் லெனின்கிராட் அணு மின் நிலையத்தில் செர்னோபில் அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்.எம்.பி.கே. உலைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோலா அணு மின் நிலையத்தில் வி.வி.இ.ஆர். உலைகளைப் பயன்படுத்திஇருக்கிறார்கள். இதேபோன்ற வி.வி.இ.ஆர். உலைகளைத்தான் கூடங்குளத்திலும் நிறுவி இருக்கிறார்கள். அணு உலைக் கதிரியக்கத்தைச் செயல் இழக்கவைப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லாத நிலையில், 2020-க்குள் மூட வேண்டும் என்று எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் ரஷ்யாவில் கிளம்பிஇருக்கிறது இப்போது. கூடங்குளத்தில் நடைபெற்ற 'ஹாட் ரன்’ முடிவு வெற்றிகரமானதாக இருந்தால், அந்த அறிக்கையை மக்கள் சந்தேகம் தீர வெளியிடலாமே என்று கோரிக்கை வைக்கிறார்கள் அணு சக்தி எதிர்ப்பாளர்கள்! வெளியிடுமா கூடங்குளம் அணு மின் நிலையம்?